ஜூனியர் விகடனில் இருந்து...
பெட்ரோல் விலை ஏறும்போது எல்லாம் ராமர் பிள்ளை முகம் ஞாபகத்துக்கு வரும். என்ன செய்கிறார் என்று தேடிப் பார்த்தோம்.
சென்னையில் வசித்தாலும் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டு இருக்கும் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் பிடித்தோம். இன்னும் அதே உற்சாகத்தோடு இருக்கிறார்.
''ஆகஸ்ட் வரைக்கும் காத்திருங்க சார். நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியோட வர்றேன். எல்லா சதிகளையும் முறியடிச்சு வெற்றிக்கோட்டை நெருங் கிட்டேன்'' என்று உற்சாகம் ததும்பப் பேசும் ராமர் பிள்ளையின் பேச்சு முழுவதும் அதிரடி சரவெடி.
''நான் சாதாரணக் கிராமத்து மனுஷன். உலகத் தையே வாட்டி வதைக்கிற எரிபொருள் பிரச்னைக்கு என் அறிவுக்கு எட்டுன அளவில் ஒரு பொருளைக் கண்டுபிடிச்சு, 'மூலிகைப் பெட்ரோல்’னு பேர் வெச்சேன். அப்போ நாடே பரபரப்பாச்சு. நாலு மாநில முதல்வர்களுக்கு முன், அதை சோதனை செஞ்சு காட்டினேன். ஆனால் என் வளர்ச்சி பல பேரைப் பயமுறுத்த ஆரம்பிச்சது. 'நான் ஒரு ஃபிராடு’னு கதை பரப்ப ஆரம்பிச்சாங்க.
'ராமர் பிள்ளை கண்டுபிடிச்சது பெட்ரோலே இல்லை’னு சொன்னாங்க. சரி, இருக்கட்டும். நான் கண்டுபிடிச்சது பெட்ரோல் இல்லைன்னே வெச்சுக் குவோம். ஆனால், என் கண்டுபிடிப்பை வண்டியில் ஊத்தினா வண்டி ஓடுதுல்ல... அதனால் வண்டிக்கு எந்த பாதிப்பும் இல்லேல்ல... அப்புறம் என்ன?
இத்தனைக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் 42 ரூபாய் விற்ற காலத்தில் ஒரு லிட்டர் 13 ரூபாய்க்கு நான் கொடுத்தேன். கொஞ்ச நஞ்சம் இல்லீங்க, 13 லட்சம் லிட்டர் பெட்ரோல் தயாரிச்சு வித்திருக்கேன். அதைக்கூட, 'பெட்ரோலிய மூலப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிச்சுட்டு பொய் சொல்றார்’னு சொன்னாங்க. 42 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கி 13 ரூபாய்க்கு விற்க, நான் என்ன லூஸா?
நான் தயாரிச்சு விற்ற 13 லட்சம் லிட்டருக்கும் அரசாங்கத்துக்கு வரி கட்டி இருக்கேன். என்னைத் தப்புன்னு சொல்ற அரசாங்கம், அப்புறம் ஏன் என்கிட்ட வரி வாங்குச்சு. நான் கண்டுபிடிச்ச எரிபொருளுக்கு, 'மூலிகை பெட்ரோல்’னு பேர் வெச்சதுதான் நான் பண்ண ஒரே தப்பு. இப்போ சொல்றேன், நான் கண்டுபிடிச்சது மூலிகைப் பெட்ரோலே கிடையாது.
அது ஒரு மாற்று எரிபொருள். அதுல என்ன தப்புன்னாலும் சொல்லுங்க, ஒப்புக்கிறேன். 'இதைப் போட்டா வண்டி சீக்கிரம் ரிப்பேர் ஆகுது. வழக்கத்தை விட குறைவான மைலேஜ் கிடைக்குது. சுற்றுச்சூழலுக்கு ஆபத்து’ இப்படி எந்தக் குறையையும் என் மாற்று எரிபொருளில் சொல்லவே முடியாது'' என்று படபடவெனப் பேசியவரிடம், ''ஆகஸ்ட் அறிவிப்புப் பற்றி சொல்லுங்களேன்'' என்றதும், அடுத்த ஷாக்
கொடுத்தார்.
''என் கண்டுபிடிப்பை எப்படியாவது மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கணும்னு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜியை சந்திச்சுப் பேசினேன். அவர்கிட்ட என் மாற்று எரிபொருளை சோதனை செஞ்சு காட்டினேன். அதைத்தொடர்ந்து அண்ணா ஹஜாரே, பாபா ராம்தேவையும் சந்திச்சுப் பேசினேன். இந்த மும்மூர்த்திகளும் என் கண்டுபிடிப்பைப் பார்த்து ஆர்வமாயிட்டாங்க. அதிலும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி, என்
கண்டுபிடிப்பைத் தத்து எடுத்துக்கிட்டதுபோல, எல்லா உதவிகளையும் செஞ்சார். கிட்டத்தட்ட 1.5 கோடி ரூபாய் செலவில் மாற்று எரிபொருள் தயாரிப்பதற்கான இயந்திரம் தயாராகிடுச்சு.
ஹரித்துவாரில் இருக்கு. சென்னையிலும் இடம் பார்த்தாச்சு. கடைசிக் கட்ட வேலைகள் கொஞ்சம் பாக்கி. அதுவும் முடிஞ்சதுன்னா, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உற்பத்தி ஆரம்பிச்சுடும். பரபரப்பா வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். ஆனா இப்போகூட, ரவிசங்கர்ஜியை சந்திக்கப் போற ஒவ்வொரு தடவையும் அதைத் தடுக்கிறதுக்கு பல பேர் சதி செய்றாங்க. ஒருத்தனை வளரவிடாமக் காலைப் பிடிச்சு
இழுத்துவிடுறதுல இத்தனைப் பேர் ஏன் ஆர்வமா இருக்காங்கன்னு புரியலை...'' என்ற ராமர் பிள்ளை, அவரது மாற்று எரிபொருள் ஒரு லிட்டர் அஞ்சு ரூபாய்க்குக் கிடைக்கும் என்று ஆச்சர்யப் படுத்துகிறார்.
''ஆமா சார், 15 வருஷத்துக்கு முன்னால ஒரு லிட்டர் 13 ரூபாய்னு வித்தேன். இப்போ தொழில்நுட்பம் வளர்ந்துடுச்சு. நானும் சில விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அதனால ஒரு லிட்டர் அஞ்சு ரூபாய்க்குத் தயாரிக்கலாம்.
வரி விதிச்சா அதிக பட்சம் ஏழு ரூபாய் வரும். இப்போ ஒரு லிட்டர் 70 ரூபாய். இந்தக் காசுக்கு 14 லிட்டர் மாற்று எரிபொருள் போடலாம். நம்புறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, நடைமுறைக்கு வரும்போது எல்லாம் சரியாகிடும். நிச்சயம் என்னை நிரூபிப்பேன். ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குத் திருப்புமுனையான செய்தியாக இது இருக்கும்!'' என்று படபடக்கிறார்..
பார்க்கலாம்!

பதிப்புரை N.K.M.புரோஜ்கான்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval