டைட்டானிக் படம் பற்றி தான் அனைவரும் பேசுகிறோமே தவிர, நிஜ டைட்டானிக் கப்பல் பற்றி நம்மில் எத்தனை பேர் தெரிந்து கொண்டோம் என்று தெரியவில்லை. இந்தக் கட்டுரை எழுதும் வரை எனக்கும் எதுவும் தெரியாது.
இதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும், இந்தக் கப்பல் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலில் எழுதுகிறேன். இதன் மூலம் நானும் பல விசயங்கள் தெரிந்து
கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
படிக்க ஓரளவு எளிமையாக கொடுக்க முயற்சிக்கிறேன்.
உலகின் முதல் சொகுசுக் கப்பலான டைட்டானிக்கின் பெயர் RMS TITANIC. இங்கிலாந்தின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான White Star Line நிறுவனம் இதைக் கட்டியது.
கப்பல் கட்டும் பணி 1909 மார்ச் மாதம் 31 ம் தேதி துவங்கி 1911 மே மாதம் 31 ம் தேதி கட்டி முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு வருடம் கட்டப்பட்ட இந்தக்கப்பலின் எடை 46,328 டன் ஆகும்.
Southampton நகரில் (இங்கிலாந்து) இருந்து கிளம்பி Cherbourg, France & Queenstown, Ireland வழியாக நியூயார்க் சென்றடைவதாக திட்டமிடப்பட்டது.
டைட்டானிக் கப்பல் பெண் பாலில் தான் (She) அழைக்கப்படுகிறது அதாவது இந்தக்கப்பலை பெண்ணாக கருதுகிறார்கள்.
இந்தக் கப்பல் A முதல் G வரை பல அடுக்குகளாக கட்டப்பட்டது. மேல் (A) அடுக்கில் முதல் வகுப்பு பயணிகளான செல்வந்தர்களுக்கும் அதன் கீழே வரும் அடுக்குகள் அதற்கு கீழ் வகுப்புகளான இரண்டு, மூன்று வகுப்பு பயணிகளுக்குமானது. மூன்றாம் வகுப்பு பயணிகள் அறை டார்மிட்டரி என்று அழைக்கப்படும் பல அடுக்குகளைக் கொண்ட படுக்கைகளால் ஆனது. (டைட்டானிக் படத்தில் ஜேக் - ன் அறை)
இந்த சொகுசுக் கப்பல் முக்கியமாகப் பணக்காரர்களுக்காகவே கட்டப்பட்டது. இதில் உள்ள ஒரு அடுக்கின் பெயரான Promenade Deck (A Deck) ல் நீச்சல்க் குளம், சொகுசான உணவருந்தும் இடம், படிக்கும் எழுதும் இடம், உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு இடம் மற்றும் புகைபிடிக்கும் இடம் என்று பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டது. இதில் பயன்படுத்தப் பட்ட பொருட்கள் சாமானியர்கள் கனவிலும் நினைத்துப்
பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. புரியும் படி கூறவேண்டும் என்றால் சாதா விடுதியில் தங்கி இருந்தவர் ஐந்து நட்சத்திர விடுதிக்கு சென்றால் எப்படி மலைத்துப் போவாரோ அது போல இருக்கும். முதல் வகுப்புப் பயணிகள் தங்களுடன் செவிலியர் உதவியாளர்கள் ஆகியோரை துணைக்கு அழைத்து வர அனுமதிக்கப்பட்டனர்.
இதில் இங்கிலாந்து அமெரிக்க நாடுகளின் மிகப்பெரிய பணக்காரர்கள் பெரும்பாலும் சென்றனர் இதில் அமெரிக்க மில்லியனர் John Jacob Astor IV மற்றும் இவரது 18 வயது கர்ப்பமான மனைவி பிரசவத்திற்காக நியூயார்க் சென்றார்கள். John Jacob Astor IV தான் இந்தக்கப்பலில் மிகப்பெரிய பணக்காரர். இவர் ஆண் என்பதால் படகில் ஏற அனுமதிக்கப்படவில்லை பின் 1912 ஏப்ரல் 22 ம் தேதி இவருடைய இறந்த உடலுடன் இருந்த பல ஆயிரம்
டாலர்கள் பணமும் கண்டு எடுக்கப்பட்டது. RMS Carpathia கப்பலால் காப்பற்றப்பட்ட இவரது மனைவி இதன் பிறகு 1916 ல் மறுமணம் செய்து கொண்டார் அதன் பிறகு அவரை விவாகரத்து செய்து விட்டு இன்னொருவரை 1933 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
மூன்றாம் வகுப்பில் தான் அதிக பயணிகள் இருந்தார்கள் இவர்கள் பெரும்பாலும் குடியேறிகள், அமெரிக்கா சென்று வேலை தேடி தங்கள் வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டு இதில் வந்தவர்கள். பல நாட்டை சேர்ந்தவர்களும் இதில் இருந்தனர். மூன்றாம் வகுப்பில் இருந்த இரண்டு மாதக் குழந்தையான Millvina Dean தான் இருந்ததிலேயே வயது குறைந்த பயணி!! இவர் தன்னுடைய 97 ம் வயதில் 2009 ஆண்டு காலமானார்.
டைட்டானிக் விபத்தில் பிழைத்தவர்களில் இவர் தான் கடைசி நபர்.
ஒவ்வொரு அடுக்கிற்க்கும் கதவு இருக்கும் இதனால் ஒரு வகுப்பு பயணிகள் மற்ற வகுப்பு பயணிகளுடன் கலக்காமல் இருக்க முடியும். விபத்து ஏற்பட்ட போது கதவு மூடி இருந்ததால் சிலர் வெளியே வர முடியாமல் மாட்டிக்கொண்டனர்.
கப்பலில் செல்லக் கட்டணம் தோராயமாக மூன்றாம் வகுப்பிற்கு $36 இரண்டாம் வகுப்பிற்கு $66 முதல் வகுப்பிற்கு $125 மற்றும் டீலக்ஸ் வகுப்பிற்கு $4500 ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. நூறு வருடம் முன்பு 4500$ என்றால் தற்போது கணக்குப் போட்டுப் பார்த்தால் தலை சுற்றுகிறது. அந்தக்காலத்தில் ஒரு வீட்டையே 1000$ க்கு வாங்க முடியுமாம்!
விபத்து ஏற்ப்பட்டால் தப்பிக்க 20 படகுகள் (Life boats) மட்டுமே இருந்தன இதில் 16 படகுகள் 65 பேரையும் 4 படகுகள் 47 பேரையும் கொள்ளும் அளவு கொண்டது 1100 – 1200 பேர் தப்பித்து இருக்க முடியும் ஆனால் இதில் 710 பேர் மட்டுமே தப்பிக்க முடிந்தது. முதல் வகுப்பு பயணிகள் படகில் மிகக் குறைவானவர்களே இருந்தனர் அதோடு தனது படகில் ஏறி படகை கவிழ்த்து விட்டால் என்ன செய்வது என்று பலரை படகில் ஏற
இருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. இந்த விபத்திற்குப் பிறகே பாதுகாப்பு விசயத்தில் அனைவரும் அதிக கவனம் செலுத்தினார்கள். உயிர்காக்கும் படகுகளின் முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டது.
படகில் ஏற முடியாதவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்து குளிரில் சில நிமிடங்களில் விரைத்து இறந்து விட்டார்கள். கடுமையான பனி (−2°C) அப்போது நிலவியது. டைட்டானிக் படத்தில் நீங்கள் கவனித்து இருக்கலாம் ஜேக் தண்ணீரில் விழுந்த உடனே அவரது தலை முடியில் இருந்த நீர் பனிக்கட்டியாக மாறி இருக்கும்.
நம்மால் பனிக்கட்டியையே சில நொடிகள் கூட கையில் வைத்து இருக்க முடியாது அப்படி இருக்கும் போது நம் உடல் முழுவதும் இதைப் போல குளிர்ச்சியில் இருந்தால்!…
தப்பித்துச் செல்ல குழந்தைகளுக்கும் பெண்களுக்குமே முன்னுரிமை வழங்கப்பட்டது எனவே இந்தக்கப்பலில் சென்ற பெரும்பான்மையான ஆண்கள் இறந்து விட்டார்கள். அப்படியும் தப்பித்த ஆண்கள் நாட்டில் உள்ளவர்களால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகினர் காரணம் பல குழந்தைகள் பெண்கள் படகு கிடைக்காமல் இறந்து விட்டனர் அப்படி இருக்கும் போது அவர்களை காப்பாற்றாமல் கோழை போல இவர்கள்
நடந்து கொண்டதால் பலரால் அதன் பிறகு சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு இகழப்பட்டனர்.
மூன்று என்ஜின்களைக் கொண்ட இதில் இரண்டு எஞ்சின்கள் இணைந்து 30,000 குதிரை சக்தியை (Horse Power) தரவல்லது. நிலக்கரி மூலம் வேலை செய்யும் Turbine மேலும் 16,000 குதிரை சக்தி வேகத்தை தரவல்லது மொத்தம் 46,000 குதிரை சக்தி. இரண்டு எஞ்சின்கள் 720 டன் எடை கொண்டதாகும். இதை இயக்குவதில் 176 பணியாளர்கள் பகுதி நேர வேலையில் (24/7) பயன்படுத்தப்பட்டார்கள். அழுக்கு, வெப்பம் அதிகம் உள்ள இடம் என்பதால் இங்கு பணி
புரிவது என்பது மிகச் சிரமமான ஒன்றாகும். இதில் தினமும் வரும் 100 டன் சாம்பல் கடலில் கொட்டப்பட்டது.
கப்பலின் வேகம் மணிக்கு 39 கிலோ மீட்டர்
முதல்வகுப்பில் 739 பயணிகளும், இரண்டாம் வகுப்பில் 674 பயணிகளும், மூன்றாம் வகுப்பில் 1026 பயணிகளும் இவர்களோடு 900 பணியாளர்களும் பயணம் செய்ய முடியும் ஆக மொத்தம் 3, 339 பேர் பயணம் செய்யலாம் ஆனால் இதில் 2,224 நபர்கள் மட்டுமே (900 ஊழியர்களும் சேர்த்து) பயணம் செய்தார்கள். முன்பே குறிப்பிட்டபடி இந்தக்கப்பலில் மூன்றாம் வகுப்பு பயணிகளே அதிகம் இருந்தனர். அப்போது ஒவ்வொரு குடும்பமும்
மிகப்பெரியதாக இருக்கும் 7 குழந்தைகள் எல்லாம் சகஜமாக பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறு வந்தவர்கள் பலர் குடும்பத்தோடு இறந்து போனார்கள்.
டைட்டானிக் பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல பயன்படாமல் கார்கோ என்று அழைக்கப்படும் சரக்குப் பொருட்களையும் ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்டது. இதில் பல டன் பொருட்கள் சரக்குகளாக கொண்டு செல்லப்பட்டன. கடிதங்கள் கொண்டு செல்லவும் பயன்படுத்தப்பட்டது.
இதில் பயன்படுத்தப்பட்ட தந்தி முறை சாதனங்கள் 1000 மைல் வரை தகவல்களை அனுப்ப வல்லது.
ஏப்ரல் 14 இரவு 11 : 40 மணிக்கு டைட்டானிக் 220 அடி நீள பனிப்பாறையில் மோதி மூழ்கத் தொடங்கி ஏப்ரல் 15 விடியற்காலை 2 : 20 மணிக்கு முற்றிலுமாக 12,415 அடி ஆழத்தில் (3,784 மீட்டர்) மூழ்கியது. விபத்து நடந்தவுடன் உதவி கோரிய போது அருகில் இருந்தது கப்பல் RMS Carpathia ஆகும், தூரம் சுமார் 93 கிலோ மீட்டர். இது வர 4 மணி நேரம் ஆகும் என்று கணக்கிடப்பட்டது. RMS Carpathia சரியாக 4 : 10 மணிக்கு டைட்டானிக் கப்பல் மூழ்கிய
இடத்திற்கு வந்து படகில் பிழைத்தவர்களை காப்பாற்றியது. படகில் இருந்தவர்கள் ஒரு சிலர் குளிர் தாங்காமல் இறந்து விட்டார்கள். இந்த விபத்தில் மொத்தமாக 1,514 பேர் இறந்து விட்டார்கள் பணியாளர்களுடன் சேர்த்து 710 பேர் உயிர் பிழைத்தார்கள்.
கேப்டன் Edward John Smith இருப்பதிலேயே மிகுந்த அனுபவம் பெற்றவராக விளங்கி இருந்தார். கப்பல் மூழ்கும் போது கடைசியாக இவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று பல்வேறு ஊகங்கள் கூறப்படுகின்றன. செய்தி அறையில் பரபரப்பாக இருந்தார் என்றும், அறையினுள் அமைதியாக சென்று விட்டார் என்றும், தண்ணீரில் குதித்து ஒரு குழந்தையை காப்பாற்ற முயற்சித்தார் என்றும் பல்வேறு செய்திகள்
உலவுகின்றன. இவருக்கு இங்கிலாந்தில் சிலை வைக்கப்பட்டு கவுரப்படுத்தப்பட்டுள்ளது.
மூழ்க வாய்ப்பே இல்லை கடவுளாலும் எதுவும் செய்ய முடியாது என்று கருதப்பட்ட டைட்டானிக்கின் முதல்ப் பயணமே கடைசிப்பயணமாக ஆகிப் போனது மிகவும் சோகமான விசயமாகும். 10 ஏப்ரல் 1912 அன்று புறப்பட்டு 15 ஏப்ரல் 1912 மூழ்கிய டைட்டானிக் மொத்தமாக பயணம் செய்தது நான்கு நாட்கள் மட்டுமே!
மனிதன் என்னதான் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எதை உருவாக்கினாலும் இயற்கை முன்பு நாம் ஒன்றுமில்லை என்று நம் அனைவருக்கும் இயற்கை உணர்த்திக்கொண்டே வருகிறது. அதில் விலை உயர்ந்த பாடமாக மனித குலத்திற்கு இந்த விபத்து அமைந்து விட்டது.
என்றாலும்,
இவையெல்லாம் விட கடாரம் சென்ற சோழனின் கப்பல் படை..., ஜப்பானை ஆக்கிரமிக்கப் புறப்பட்ட செங்கின்கிஸ்கானின் கப்பல் படையை விட, மிகப் பெரிது என்று தெரியுமா என்ன..?
சங்கிலிக்கருப்பு

No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval