அழுக்கினில் ஆயிரம் வகையுண்டு
அடுக்கடுக்காய் கேட்டு
அறிவது நன்று
அகத்தின் அழுக்கு
அன்பை முறிக்கும்
புரத்தின் அழுக்கு
புகழைக் கெடுக்கும்
மனத்தின் அழுக்கு
மதியை இழக்கும்
குணத்தின் அழுக்கு
குடும்பத்தைப் பிரிக்கும்
உடையின் அழுக்கை
ஊருலகம் வெறுக்கும்
உள்ளத்தின் அழுக்கோ
உயர்வை தாழ்த்தும்
இல்லற அழுக்கு
இன்பத்தைக் கெடுக்கும்
இயற்கையின் அழுக்கோ
இவ்வுலகையே அழிக்கும்
நட்பின் அழுக்கில்
நம்பிக்கை இழக்கும்
நடத்தையின் அழுக்கில்
நன்மதிப்பு மறையும்
மனிதனின் அழுக்கு
புனிதத்தைக் கெடுக்கும்
மக்களின் அழுக்கு
மகிழ்வினைக் குழைக்கும்
அழுக்கின் அசிங்கங்கள்
அறிந்திடல் நன்று
ஆறறிவு மனிதனுக்கு
அதிசயமன்று
அழுக்கினை அகற்றினால்
வெறுப்புகள் நீங்கும்
அனைவரும் உணர்ந்திட்டால்
அகிலமே தழைக்கும்.
அதிரை மெய்சா
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval