அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு ( எது நடக்க கூடாதோ அவை எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன .. அல்லாஹ் நம்மை பாதுக்காப்பானாக !)
1. பள்ளிவாசல்களை தூங்கும் இடமாகவும் , சர்ச்சை செய்யும் இடமாகவும் பயன் படுத்துகிறார்கள் ..
2. ஆங்காங்கே புரட்சியும் , குழப்பமும் பரவி கிடக்கிறது .. அதனால் என்ன நடக்குமோ என்ற பயத்தால் மக்கள் வாழ்கிறார்கள் ..
3.பெண்கள் ஆண்களை மிகைத்து நிற்கிறார்கள் ..
4.பெற்றோர்கள் உதாசினப்படுத்தப்பட்டு மனைவி இப்பொழுது போற்றப்படுகிறாள் ..
5. தொழுகை மிகவும் அலட்சியப் படுத்தப்படுகிறது .. தொலுபவர்களிலும் மனத்தூய்மை உடையவர்கள் மிகவும் அரிதே !
6. முகஸ்துதிக்காக (தன்னை புகல வேண்டும் ) நற்காரியங்கள் செய்யப்படுகின்றன ..
7.அக்கிரமக்காரன் புகழப்படுகிறான் .. பெரும் பாவங்கள் புரிபவன் மக்களால் பாராட்டப்படுகிறான் ..
8. மது அருந்தும் பழக்கம் சர்வ சாதரணமாகிவிட்டது.. விபச்சாரம் செய்பவன் அதை செய்துவிட்டு பெருமையாகப் பேசிக் கொள்கிறான் ..
9. அரசாங்கமே மதுவையும் , விபச்சாரத்தையும் பொறுப்பேற்று நடத்துகிறது ..
10. ஏழைகள் மிகவும் , கேவலமாகவும், இழிவாகவும் பார்க்கப்படுகிராகள் ..
11. பெண்கள் வெட்கத்தை தொலைத்து திரையின்றி ஆண்களிடம் பழகுகிறார்கள் ..
12.வட்டியும் , லஞ்சம், கொடுத்தலும் , வாங்கலும் பெருகி விட்டது ..
13. மக்கள் பெருமை , அகம்பாவம் , கர்வம் கொண்டவர்காளாக மாறி விட்டார்கள் ..
14. கஞ்சத்தனம் பெருகிவிட்டது ..
15. ஜக்காத்தை கொடுக்க வேண்டியவர்களே ஜக்காத்தை வாங்குகிறார்கள் ..
16. உண்மையைப் பேசுபவன் மீது மக்கள் கோபம் கொள்கிறார்கள் ..
17. பாவம் செய்ய மறப்பதில்லை .. ஆனால் பாவ மன்னிப்பைக் கேட்க மறந்து விடுகிறார்கள
18. இவை எல்லாத்தையும் விட மறுமை என ஒன்று உறுதியாக இருப்பதைப் அறிந்தும் அதற்காக எந்த முன் ஏற்பாடும் செய்யாமல் இம்மைகாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் ..
அல்லாஹ் நம்மை பாதுக்காப்பானாக !
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval