Sunday, August 3, 2014

கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகள்!!!


உடலுக்கு வேண்டிய சத்துக்களில் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். தற்போது நிறைய மக்கள் மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்.


இவற்றிற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சரியாக உட்கொள்ளததும் ஒரு வகையில் காரணம்.

அதுமட்டுமின்றி கால்சியம் உள்ள உணவுகளை மட்டும் சாப்பிட்டால், அனைத்தும் சரியாகிவிடாது. ஏனெனில் கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியமாகிறது. எனவே கால்சியத்துடன், வைட்டமின் டி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

பொதுவாக கால்சியம் குறைபாடானது ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். ஏனெனில் மாதம் மாதம் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதால், அதிலேயே பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். மேலும் பிரசவத்தின் போதும் நிறைய் கால்சியமானது போய்விடும்.

எனவே ஆண்களை விட பெண்கள் கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இப்போது எந்த உணவுகளிலெல்லாம் கால்சியம் சத்து அதிகம் உள்ளது என்பதைப் பார்ப்போமா!!!

சாலமன் மீனில்: ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதோடு, இந்த மீன் கடல் நீரில் உள்ள கனிமச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால், இதனை முள்ளோடு சாப்பிட வேண்டும். இதில் கால்சியம் குறைவாக இருப்பினும், உடலுக்கு வேண்டிய மற்ற அனைத்து சத்துக்களையும் பெறலாம்.

சோயா பாலில்: சாதாண பாலை விட அதிக அளவில் கால்சியம் இல்லாவிட்டாலும், ஒரு அவுண்ஸ் பாலில் 300 மில்லி கிராம் கால்சியம் சத்தை பெறலாம்.

ஓட்ஸை: அதிகம் சாப்பிடுவதால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. அதேசமயம் இதில் சில கால்சியம் சத்தும் உள்ளடங்கியுள்ளது. எனவே பெண்களுக்கு, இது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும்.

அறுகீரை (Arugula): இது ஒருவகையான கீரை வகைகளுள் ஒன்று. இதனை பொதுவாக சாலட்டில் தான் பயன்படுத்துவார்கள். இந்த கீரையில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால்,. இதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.


பொதுவாக பீன்ஸில்: கால்சியம் அதிகம் இருக்கும் என்று கேள்விபட்டிருக்கமாட்டோம். ஆனால் இதிலும் ஓரளவு கால்சியம் நிறைந்துள்ளது. அதிலும் 1/2 கப் வெள்ளைக் காராமணியில் 100 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.


நன்றி ;தமிழ் தகவல்
பதிப்புரை N.K.M.புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval