மும்பை: இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கவும், கள்ள நோட்டுகள் புழங்கவதை தடுக்கவும் ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் நோட்டுகளை அடுத்த வருடம், சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் துவங்கியுள்ள நிலையில் புதிய தேசிய செலுத்தும் முறை மசோதவையும் உருவாக்கி வருகிறது குறிப்பிடதக்கது. இதன் மூலம்
பணப்பரிமாற்றத்தில் இடைத்தரகர்கள் உள்ளீடு இருக்காது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுகள்
ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2013-14ஆம் ஆண்டின் நிதி அறிக்கையில், இந்தியா ரூபாய் நோட்டுகளின் தரத்தை உயர்த்துவது குறித்து குறிப்பிட்டு இருந்தார் ரகுராம் ராஜன். மேலும் இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்துவது குறித்து கடந்த ஒரு வருடமாக ஆலோசித்த பின்னரே முடிவு எடுக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
1 பில்லியன் டாலர்
மேலும் இத்தகைய பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சிட சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. இந்த நோட்டுகள் அடுத்த நிதியாண்டின் துவக்கதில் இந்தியாவின் 5 முக்கிய பகுதிகளில் அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
பிளாஸ்டிக் நோட்டுகள்
இந்த ரூபாய் நோட்டுகள் எளிதில் கிழிக்க முடியாத ஒன்று, அதேபோல் கறைப்படியாது. இது சாதாரண காகித ரூபாய் நோட்டுகளை விட விலை உயர்ந்தது. மேலும் இதனை அச்சிடும் தொழிற்நுட்பம் இந்தியாவில் தற்போது தான் வளர்ந்து வருகிறது. அதனை மேம்படுத்த வெளிநாடுகளில் உதவியை ரிசர்வ் வங்கி நாடிவருகிறது.
5 பகுதிகள்
இந்த நோட்டுகளை முதற்கட்டமாக இந்தியாவில் கொச்சி, மைசூர், ஜெய்பூர், புவனேஸ்வர் மற்றும் சிம்லா அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இப்பகுதிகளை தேர்ந்தெடுத்ததன் முக்கிய காரணம் இதன் பருவநிலைகள் தான் என்பதையும் ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது.
Thank you : tamil.goodreturns.in
பதிப்புரை;N .K .M .புரோஜ்கான்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval