Tuesday, August 5, 2014

உங்களின் ஒருநாள் ஆக்சிஜன் தேவை எவ்வளவு தெரியுமா…?


Holy basil flowers Stock Photo - 12722276காசு கொடுக்காமல் ஓசியிலேயே கிடைப்பதால் ஆக்சிஜன் தேவையை பற்றி என்ன சார் கவலை... ? இப்போ கிடைக்குதல்ல .. கக்ஷ்டப்படுகிற பொழுது பார்த்துக்கொள்ளலாம்... விடுங்க சார்... 
என்பவர்களுக்குதான் முக்கியமாக தெரியவேண்டிய விசயம் இது.. 
இதுவரை எப்படியோ.. இனிமேலாவது வீட்டை சுற்றி இருக்கிற மரத்தையாவது இனி வெட்டாமல் இருப்பீர்கள் அல்லவா...? 


சராசரியாக ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நாளைக்கு 53 லிட்டர் ஆக்சிஜன் கண்டிப்பாக தேவை .....ஒரு மரத்தில் உள்ள இலையானது 5 மிலிலிட்டர் அளவிற்கு ஆக்சிஜனை வெளிவிடுகிறது. உங்கள் வீட்டில் 4 பேர் இருக்கிறீர்கள் என்றால் குறைந்த பட்சம் உங்களுக்கு தேவையான ஆக்சிஜனை தர , ஒரு மரமாவது ( 50000 இலைகள் ..... முடிந்தவர்கள் எண்ணிப்பார்த்துக்கொள்வதும் தப்பில்லை.....??!! ) தேவை.. 

காற்றிலே ஆக்சிஜன் இருக்கிறது என்றாலும் , கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஜன், மூக்கு முட்டும் தூசுகள், இரசாயன வாயுக்கள், மூக்கை முட்டும் கார்ப்பொரேசன் பஸ் கரும்புகை...... என்று ”அமிர்தத்தில் அசிங்கத்தை” கலந்ததுமாதிரி காற்று கெட்டுக்கொண்டிருப்பதால் , குறைந்தபட்சம் ஒரு மரத்தையாவது உங்கள் வீட்டுக்கு அருகில் வளர்த்தீர்கள் என்றால் கார்பன் டை ஆக்சைடு
முதற்கொண்டு சகலத்தையும் வடிகட்டி போனசாக ஆக்சிஜனையும் சேர்த்து தருவதால் , உங்கள் நுரையீரலுக்கு ஒரு அருமையான நண்பரை சேர்த்துவைத்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்..... 

மூங்கிலும், துளசியும் இன்னும் விசேசம்... ஆக்சிஜனை அதிகமாக வெளியிடுவதில் ( துளசி பகலில் மட்டுமல்ல.. இரவிலும் கூட ஆக்சிஜனை வெளியிடுகிறது ) அதிகமாக இவைகளை உங்கள் வீட்டுத்தோட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.... வீட்டுக்குள்ளே கூட, இவற்றில் சில ரகங்களை நீங்கள் வளர்த்தலாம்.... 

ஆக்சிஜன் நிலையத்தினை தேடி ஓடப்போகிற எதிர்காலத்தில் வீட்டிலேயே செலவில்லாமல் ஆக்சிஜனை உற்பத்தி செய்துகொள்ளலாமே...? ” எங்கள் வீட்டுதோட்டத்தில் நாங்களே உற்பத்தி செய்த ஆக்சிஜனை தான் சுவாசிக்கிறோமாக்கும்” என்று காலரையும் உயர்த்திக்கொள்ளலாம்... !!!?

-----எழுதியவர் : muruganandan
பதிப்புரை N.K.M.புரோஜ்கான்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval