நியூயார்க்: 2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள்.
அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா... எல்லாரும் உள்ள போகப் போறோம்' ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. கடந்தாண்டு கூட மாயன் காலெண்டரைக் காட்டி பயமுறுத்தினார்கள்.
இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ராட்சத விண்கல்...
அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம்.
1950 டிஏ...
அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ' என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2880ம் ஆண்டு...
மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் பூமியை நோக்கி பாய்ந்து வருவதாகவும், 2880-ம் ஆண்டில் இது மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் பூமியை தாக்கும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பேரழிவு...
அப்படி இந்த விண்கல் மோதினால், பூமி அதிபயங்கர சத்தத்துடன் வெடித்து, தட்ப வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு சுனாமி உள்ளிட்ட பேரழிவு ஏற்படுமாம். அதன் மூலம் மனித குலம் முற்றிலுமாக அழியும் என அவர்கள் ஆருடம் கூறுகின்றனர்.
முரண்பட்ட தகவல்கள்...
அதே நேரத்தில் இந்த விண்கல் பூமியை மோதாமல் தடுக்க முடியும் என்றும் ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றொரு தரப்பினரோ, இந்த விண்கல் பூமியில் மோதுவதில் 300 -ல் ஒரு வாய்ப்பு தான் உள்ளது என்கின்றனர். எது எப்படியோ, அப்போ நாம நிச்சயமா உயிரோட இருக்க மாட்டோம்ங்கறது மட்டும் நிசர்சனமான உண்மை !
----http://tamil.oneindia.in/---

பதிப்புரை;N .K .M .புரோஜ்கான்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval