Saturday, April 21, 2018

இப்படியும் சில அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்....

Image may contain: 1 person, sitting
நண்பர்களே....... 
கண்டிப்பாக படியுங்கள்..!!!
மாற்றம் தேடி....
இப்படியும் சில அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்....
கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்றபோது இந்த மனிதரை சந்திக்க நேர்ந்தது அங்கு ஆய்வாளராக பணிபுரிபவர் சாம்சன்...
என்ன செய்தார் இவர்???
*காவல் நிலைய ஆய்வாளராக வந்த பின் ஆக்கிரமிப்பு கடைகள் சாலைகளில் இருந்த இடையூறுகளை அகற்றினார்.
*பல இடங்களில் புதிதாக மரங்கள் பல நட்டுள்ளார்.
*காவல் நிலையத்தில் பல மாற்றங்களை செய்துள்ளார் .
* இயற்கை மேல் கொண்ட பாசத்தால் மரங்களில் ஆணி அடித்து செய்யப்பட்ட விளம்பரங்களை தன்னார்வலர்களுடன் இணைந்து அகற்றியதோடு விளம்பரம் செய்ய வேண்டுமா அதற்கும் வழி தருகிறேன் என சிட்டுக்குருவிக்கு கூடுகள் செய்து அந்த கூட்டில் விளம்பரம் செய்து மாட்டுங்கள் அதனால், சிட்டுக்குருவிகள் பெருகும் என அறிவுறுத்துகிறார்...
*சிரட்டைகளில் கூண்டுகள் செய்து அதனை மரங்களிலும் கூடு தேடும் இடங்களிலும் பொருத்தி வருவதோடு இதை செய்ய மாணவர்களிடம் விழிப்புணர்வு ஊட்டி வருகிறார்...
*கண்ட இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுவது தடுக்க இவரே சுவரொட்டி ஒட்ட போர்டுகள் பொருத்தி வருகிறார்.
* அவர் போகும் வழியில் ஏதேனும் பள்ளி தென்பட்டால் வாகனத்தை நிறுத்தி பாலிதீன் கவர்கள் குப்பைகள் அகற்றவேண்டிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஊட்டுவதோடு தனது வாகனத்தில் எப்போதும் வைத்திருக்கும் குப்பைதொட்டியில் குப்பைகளை பாலிதீன் குப்பைகளை சேகரிக்க அறிவுறுத்தி சாக்லெட் பரிசு வழங்குகிறார்
* சென்று கொண்டிருக்கும் போதே வெற்றிடமிருந்தால் அங்கு மரக்கன்றுகள் வாகனத்தை நிறுத்தி. நட்டு செல்கிறார்...
*கழிவு சாக்குகள் கழிவு கேஸ் டியூப்கள் போன்ற பொருட்களை கொண்டே குப்பை சேகரிக்க பைகள் செய்ய கற்றுத்தருகிறார்
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பாலிதீன் பைகள் ஒலிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் இவர் தானே டிசைன் செய்து ஒரு பையை வடிவமைத்து அதனை அதிகமாக தயாரிக்க செய்து விற்பனையும் செய்கிறார்.
மிகவும் மலிவான விலையில் ஒரு
மணிபர்சை போன்ற இந்த பை தேவைக்கு ஒரு பிக்சாப்பர் பையாக மாறுகிறது
இந்த பையாக இருந்தால் கண்டிப்பாக கடைக்கு செல்லும் போது பாலிதீன் பையாக தேவைப்படாது அதைப்பார்த்தவுடன் 100 ரூபாய்க்கு ஒரு பை வாங்கினேன் இனி வாழ்வில் எங்கும் எந்த இடத்திலும் பாலிதீன் பயன்படுத்தக்கூடாது என முடிவெடுக்க வைத்தது அந்த பை..
ஆடம்பரமாக விழா கொண்டாட்டம் அனுமதி கேட்பவர்களிடம் கனிவாய் கல்வி உபகரணங்களை தங்கள் பகுதி மாணவர்களுக்கு வழங்கவும் அறிவுறுத்துகிறார் கனிவாக...
காவல் நிலையத்தில் பசுமை விரும்பி பல ஜாடிகளில் பசுமை செடிகள் காவல் நிலையத்தில் அதிகம் குப்பைத்தொட்டி என வைத்துள்ளார்
ஒரு அட்டைப்பெட்டியும் இருந்தது அதில் மாணவர்களுக்கான சீருடையும் இருந்தது எதற்கு என விசாரித்த போது தான் தெரிந்தது அது வறுமையில் உள்ள மாணவர்களுக்கு சீருடை வழங்கிட அவரது சொந்த முயற்சியில் வரவழைத்தது என தெரிந்தது...
மேலும் இவர் இதுவரை 25 முறைக்கு மேல் இரத்த தானம் கொடுத்துள்ளார்
இவையனைத்தும் எந்த விளம்பரத்தினையும் எதிர்பார்க்காமல், நம்ம போட்டோ எடுத்ததையே அனுமதிக்கல இவரு....
அப்புறம் காலர் ஐடி பிக்சருக்குன்னு சொல்லிதான் படமெடுக்க முடிந்தது இவரை!
உண்மையில் இப்படி சிலர் இருப்பதால் தான் இயற்கை அன்னை வாழ்கிறாள்...
இயற்கை அன்னையின் வளம் காக்க இவர் செய்யும் முயற்சிகளில் இது துளி அளவே இன்னும் பதிவிட முடியாமல்.....
வெளியே தெரியாமல் செய்வது இவர் நோக்கம் என்றாலும் இவர்கள் போன்ற சமூக ஆர்வலர்களை வெளிப்படுத்துவது தமிழ்நாடு சமூகசேவை கழகத்தின் கடமையாகும் இவர்கள் போன்று அனைத்து அரசு ஊழியர்களும் தன் கடமையோடுசேர்த்து சமூகசிந்தனையோடு வாழ்ந்தால் விரைவில் உருவாகும்...
"வருமை இல்லாத தமிழகம்"
"கல்லாதவர் இல்லாத தமிழகம்"
"சுகாதாரமான வளமான தமிழகம்"
அனைத்தும் வெகுதூரமில்லை....!!!!
நண்பர்களாகிய நீங்கள் நினைத்தால்....
மாற்றுவோம் நம் தேசத்தை*

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval