Saturday, April 7, 2018

பெருந்தலைவர் காமராஜ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கல்வி மேம்பாடு.!

Image may contain: 1 person, standing and outdoor
வறுமையின் காரணமாக பள்ளிக்கு வருவதை தவிர்க்கக் கூடாது என்பதற்காக, இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்த பெருந்தலைவர் காமராஜரால், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்தது.
தாழ்த்தப்பட்டோர் குழந்தைகளுக்கு மட்டுமே இலவசக் கல்வி என்ற நிலையை மாற்றி, 100 ரூபாய் வரை சம்பளம் பெறும் பிற சமூகத்தை சேர்ந்த குழந்தைகளும் இலவசமாய் தொடக்கக் கல்வி கற்கும் சட்டத்தை கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜ்..
கிராமப் பகுதிகளில் ஒரு பள்ளிக்கும் இன்னொரு பள்ளிக்கும் தொலைதூர இடைவெளி இருப்பதை அறிந்த பெருந்தலைவர் காமராஜர், பள்ளி இல்லாத கிராமங்களில் ஓர் ஆசிரியர் பள்ளிகளை திறந்தார். படித்த , வேலையற்ற இளைஞர்களுக்கு அந்தப் பள்ளிகளில் ஆசிரியர் வேலையை வழங்கினார். பள்ளிகள் இருந்த கிராமங்களிலும் , பள்ளியை மேம்படுத்த கூடுதல் ஆசிரியர்களை நியமித்தார். இதனால் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்தது.
பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முதல் ஐந்தாண்டு திட்டக் காலத்தில் 4,267 தொடக்கப் பள்ளிகள் துவக்கப் பட்டு, 6,076 படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பணி வழங்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முன்னூறு பேர் கொண்ட கிராமங்களில் எல்லாம் பள்ளிகள் துவங்கப்பட்டு லட்சக் கணக்கானோர் புதிதாக பள்ளிகளில் சேர்க்கப் பட்டு மாபெரும் கல்விப் புரட்சியே நடைபெற்றது.
இடைநிலை ஆசிரியர் பயிற்சியைப் பெற்றவர்களுக்கும் பயிற்சி பெறாத , பள்ளி இறுதித் தேர்வை முடித்தவர்களுக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கும் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவசை சீருடை வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வி அறிமுகப் படுத்தப்பட்டது. கோவை அரசு கல்லூரியில் முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது.
1957-ல் இருந்த 15,800 தொடக்கப் பள்ளிகள் 1962ல் 29000 ஆக உயர்ந்தன. 19 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக உயர்ந்தது. 1955ல் 814 ஆக இருந்த உயர் நிலைப் பள்ளிகள் 1962ல் 1996 ஆக உயர்ந்தன.
பள்ளி செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை 1957ல் 4,36,000 ஆக இருந்தது. 1962ல் 9,00,000 லட்சமாக உயர்ந்தது.
1951 ல் ஆண்களுக்கு 27 ஆகவும் பெண்களுக்கு 9 ஆகவும் இருந்த கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கை, பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முறையே 44 மற்றும் 16 ஆக உயர்த்தப் பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 10ஆக உயர்த்தப்பட்டது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்த்தப்பட்டது. IIT கல்வி நிறுவனங்களும் துவக்கப்பட்டன.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval