Thursday, April 12, 2018

கிண்டியில் கிணற்றில் விழுந்த போராட்டக்காரரை தாமதிக்காமல் கிணற்றில் குதித்து காப்பாற்றிய காவலர்


பிரதமர் மோடி ராணுவ கண்காட்சியை துவக்கி வைக்க இன்று தமிழகம் வந்துள்ளார். பிரதமர் விமான நிலையத்தை அடைந்த போது காலையில் அவருக்கு இளைஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை நடத்தினர்.
ராணுவ கண்காட்சியை முடித்து விட்டு பிரதமர் இன்று மதியம் கிண்டி வந்தார். அப்பொது அங்கு அவருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.
அப்பொது பிரதமருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர் நபர் ஒருவர் திடீர் என கால் தவறி அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
இதை கண்ட வண்ணாரப்பேட்டை ஆய்வாளர் ஜவஹர், தீயணைப்பு வீரர்கள் வரும் வரை காத்திருக்காமல் உடனே கிணற்றிக்குள் குதிக்கின்றார்.
                                         பார்க்க வீடியோ 
வண்ணாரப்பேட்டை ஆய்வாளர் ஜவஹர்
கிணற்றில் தத்தளித்தவரை முதலில் கயிறு மூலம் மேலே அனுப்பிவிட்டு பின்னர் ஒரு கயிறின் மூலம் ஜவஹர் மேலே வருகின்றார்.
ஒரு உயிரை காப்பாற்றிய கலைப்போடு அவர் ஒரு சுவற்றில் அமர், சக காவலர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தினர்.
காப்பாற்றப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
போராட்டத்தில் தடியடியை மட்டுமே கண்ட மக்கள் ஆய்வாளர் ஜவஹர் அவர்களின் மனித நேய செயலை கண்டு அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval