மூத்த சகோதரிக்கு 17 வயது , இளைய சகோதரிக்கு 13 வயது. மாலை நேரத்தில் இயற்கை உபாதையை நிவேற்ற செல்வதாக கூறி விட்டு இருவரும் வெளியே சென்றுள்ளனர். இரவு நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. குழந்தைகள் கிராமத்தில் நடந்த கல்யாணத்திற்கு சென்றிருப்பார்கள் என வீட்டில் இருந்தவர்கள் நினைத்துக் கொண்டிருந்துள்ளனர்.
கிலமா என்ற அந்த கிராமத்தில் மறு நாள் காலையில் விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்றவர்கள் இரண்டு சிறுமிகளின் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
காவல் துறைக்கு தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்திற்கு அவர்கள் வந்தனர். அருகில் மது பாட்டில்களும் செருப்பு மற்றும் புல்லட்டுகளும் இருந்துள்ளது.
விசாரனையில் காணாமல் போன் அந்த இரண்ட சகோதரிகள் சடலமாக கிடக்கின்றார்கள் என்பது தெரியவந்தது.
சிறுமிகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து விசாரனை நடத்தப்படும் என போலிசார் கூறி சென்றுள்ளனர்.
நேற்று குற்வாளிகளை கைது செய்து விட்டதாக அறிவித்துள்ளனர். விசாரனையில் ஒரு தலை காதல் விவகாரமாக இருக்கலாம் என சந்தேகம் எழுவதாக போலிசார் கூறியுள்ளனர்.
மூத்த சகோதரியை ஒரு தலையாக விரும்பியன் இந்த வேலையை செய்திருப்பதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
கொலையை இளைய சகோதரி பார்த்து விட்டதால் அவரையும் கொலை செய்து விட்டதாக அவர்கள் கூறியதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
சாதாரண நபர்களிடம் எப்படி துப்பாகி வந்தது, இதில் சந்தேகம் இருப்பதாக அங்குள்வர்கள் தெரிவித்துள்ளனர். உரிய முறையில் விசாரனை நடத்தி குற்றவாளிகளை தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் தனது மகள் சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டரா என்பதை கண்டறிய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval