Monday, April 30, 2018

சிதம்பரத்தில் மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபன் கல்லால் அடித்து காப்பாற்றிய பொதுமக்கள்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மாணவியர் விடுதி வளாகத்தல் இன்று பிற்பகல் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் விவசாயம் முதுகலை படிக்கும் மாணவி லாவண்யாவை வாலிபன் ஒருவன் கழுத்தை அறுத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
மாணவியின் கழுத்தை அறுத்ததில் மாணவி அலறிய படி கீழே சரிய , தொடர்ச்சியாக அவன் மாணவியை தாக்க முற்பட்டபோது அந்த பகுதி மக்கள் துணிச்சலுடனும் துரிதமாகவும் செயல்பட்டு வாலிபனை கல்லால் அடித்து தாக்கி மாணவியை மீட்டுள்ளனர். எனினும் கழுத்து அறுப்பட்ட நிலையில் மாணவிக்கு சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
பொதுமக்களின் அடியை வாங்கிக் கொண்டு மாணவியை விட்டு நகராமல் அவன் மாணவியை பிடித்துக் கொண்டே இருக்கின்றான் துணிச்சலாக ஒரு சில நபர்கள் அவன் அருகே சென்று உருட்டு கட்டை உள்ளிட்டவைற்றை கொண்டு அவனை அடித்து அவனிடமிருந்து மாணவியை பிரித்து மீட்டனர்.
மாணவியின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வாலிபனை அப்பகுதி மக்கள் பிடித்து போலிசில் ஒப்படைத்துள்ளனர். விசாரனையில் பிடிப்பட்டவனின் பெயர் நவீன் என்பதும் இவன் வேலூர் கதம்பம்பட்டியை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது. இவன் இன்ஜினியரிங் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்று வந்துள்ளான்.
நவீனும் லாண்யாவும் ஒரு ஊரை சேர்ந்தவர்கள். நவீன் லாவண்யாவை ஒரு தலைபட்சமாக கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளான். சம்பம் நடந்த இன்று லாவண்யா தண்ணிடம் பேச மறுத்ததை தொடர்ந்து நவீன் தான் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
நவீனை போலிசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். வேடிக்கை பார்க்காமல் பொதுமக்களின் துணிச்சலான செயலால் மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval