ஆஸ்திரேலியா கண்டத்தின் வடக்குப் பிரதேசத்தில் ஆலிஸ் பிரிங்ஸ் என்று ஓர் ஊர் உள்ளது.
அங்கிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் ஓர் அதிசயக் கற்பாறை இருக்கிறது. ஒரே பாறையாலான அந்தக் குன்று உலகிலேயே மிகப்பெரியது எனக்கருதப்படுகிறது.
அங்கு வாழும் பழங்குடி மக்கள் அந்தக் கற்பாறையை உலுரு பாறை என்று அழைக்கின்றனர்.
அந்த அதிசய பாறை தகிக்கும் மணற்பரப்பில் பரந்த பாலைவனத்தில் உள்ளது. அது 348 மீட்டர் உயரமும் 9 கிலோமீட்டர் சுற்றளவும் கொண்டது.
இந்தப் பிரமாண்டமான கற்பாறை பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து பார்ப்போருக்கு சிவப்பு நிறக் கூடாரம் ஒன்று தன்னந்தனியே நிற்பது போன்ற பிரமையை உண்டு பண்ணும்.
உலக அதிசயங்களுள் ஒன்றான அப்பாறையின் மற்றொரு வியப்பான அம்சம் என்னவென்றால் அவ்வப்போது நிறம் மாறிக் காட்சி அளிப்பதாகும்.
அதன் இயற்கை நிறம் கருங்கற் பாறைக்கு உள்ள நீலம் கலந்த சாம்பல் நிறம்தான். ஆனால், வெயிலில் அது சிவப்பாக மாறி விடுகிறது. நண்பகலில் அது பழுப்பு நிறமாகத் தோன்றும்.
மாலைப்பொழுதில் அது நீலம் கலந்த சிவப்புப் பாறையாகக் காட்சியளிகின்றது…!!!
Thank you : http://eluthu.com/
தகவல் ;N.K .M .புரோஜ்கான்
அதிரை
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval