Thursday, August 4, 2016

இப்படியும் ஒரு மனிதர்....

பின் தங்கிய மாவட்டமான
திருவாரூர மாவட்டத்தில் உள்ள
முத்து பேட்டை நகரில்
பெண்களுக்கு என்று ஒரு பள்ளியை சர்
தரத்தில் நடத்தி வருபவர் அண்ணன்
முஸ்தபா அவர்கள் . அந்த
பள்ளியை பார்வையிட வந்த
அண்ணா திமுக M.P.
திரு .மலைசசாமி I.A.S . அவர்கள்
தனது M.P.
தொகுதி மேம்பாட்டு நிதியில்
இருந்து ருபாய் 5 லட்சம் தருகிறேன்,
அதை வைத்து இந்த
பள்ளிக்கு தேவையான
வசதிகளை செய்து கொள்ளுங்கள் என
சொல்ல, அதை வேண்டாம் என
மறுத்து என்னிடம் இறைவன்
உதவியால் பணம் இருக்கிறது, என்
பள்ளிக்கு தேவையான
வசதிகளை நானே செய்து கொள்ள
முடியும், ஆனால் இந்த வட்டாரத்தில்
இன்னொரு பள்ளி இருக்கிறது அதற்க்க
என்று சொல்லி அவர்
அழைத்து சென்று காண்பித்த
பள்ளி கோவிலூர் இந்து அறநிலைய
துறை பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
பள்ளி நிர்வாகிகளுடன்
பேசி வகுப்பறைகள் கட்ட M.P.
தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய்
ஐந்து லட்சம்
வாங்கி கொடுத்து அத்துடன்
தனது சொந்த பணம் ரூபாய்
ஏழு லட்சம்
போட்டு கட்டி கொடுத்தார் .
இதை இங்கு பதிவு செய்ய காரணம்
முகநூலில் வரும் பதிவுகள் எல்லாம்
மதங்கள் சம்பந்தப்பட்ட
எதிர்மறை விவாதங்கள்
ஆகவே இருக்கிறது . மனிதம்
மறைந்து வரும் இந்த காலகட்டத்தில்
இப்படியும் மனிதர்கள்
இருப்பதை பதிவு செய்வது அவசியம
ஒன்றாகும் .
நன்றி -
Kaviger Usman Usman

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval