Friday, August 5, 2016

படித்தால் அதிர்ந்து போவீர்கள் – வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல அதிர்ச்சி தகவல்


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த நபரின் வீட்டை சோதனை நடத்தியத்தில் பல திடிக்கிடும் தகவல்களை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள சப்தர்ஜங் பகுதியை சேர்ந்தவர் பிரிந்திரநாத் சன்யால் (62). இவர் டெல்லியில் 2 கன்சல்டன்சி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக தெரியவந்ததை அடுத்து இவரது வீட்டில் கடந்த ஜூன் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் வெளிநாடுகளை சேர்ந்த பல பெண்களின் ஆவணங்கள், எம்.பி.க்களுடன் தொடர்புடைய கடிதங்கள், ராணுவ அதிகாரிகள் பற்றிய விவரங்கள், அவர்களுடன் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்ட தகவல்கள் என பல ஆவணங்கள் அதில் இருந்தன. எனவே இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து டெல்லி காவல்துறையினர் பிரிந்திரநாத் சன்யாலை ரகசியமாக கண்காணித்தனர்.

இதை தொடர்ந்து, நேற்று அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள். அப்போது வீட்டுக்குள் உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் இருந்தார். காவல்துறையினரை கண்டதும் அவர் குளியல் அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டார். அவரை காவல்துறையினர் வெளியே கொண்டு வந்தனர். அப்போது கை மணிக்கட்டை பிளேடால் அறுத்து ரகளை செய்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர், பிரிந்திரநாத் சன்யால் வீட்டில் முழுமையாக சோதனை நடத்தினார்கள். அப்போது பல எம்.பி.க்களுடைய வெற்று லட்டர்பேடுகள், எம்.பி.க்கள் கையெழுத்துடன் இருந்தன. மேலும் ராணுவ அதிகாரிகள், கிரிக்கெட் வீரர்கள், முன்னணி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோருடன் தொடர்பு வைத்திருந்ததற்கான சான்றுகளும் இருந்தன.

இதற்கிடையே உஸ்பெஸ்கிஸ்தான் பெண்ணிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முன்னாள் ராணுவ தளபதி அஜய்அகல்வாத்துக்கும், பிரிந்திரநாத் சன்யாலும் தொடர்பு இருப்பதாகவும் பெண் ராணுவ அதிகாரிகள், முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் செக்ஸ் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

பிரிந்திரநாத் சன்யால் வீட்டில் மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்த பல பெண்களுடைய பாஸ்போர்ட்டுகள் மற்றும் விவரங்கள் கிடைத்தன. அந்த பெண்களை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து முக்கிய அதிகாரிகளும், பிரமுகர்களுக்கும் பிரிந்திரநாத் சன்யால் செக்ஸ் விருந்தாக்கியதாக தெரிகிறது.

டெல்லி காவல்துறையினர் இதுபற்றி கூறுகையில், ”பிரிந்திரநாத் சன்யாலுக்கு வெளிநாட்டு ஆயுத கும்பலுடன் தொடர்பு இருக்கிறது. ராணுவ அதிகாரிகளுடனும் இவர் தொடர்பு வைத்துள்ளார். எனவே ராணுவத்திற்கு ஆயுதம் வாங்கியது தொடர்பாக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக ராணுவ அதிகாரிகளுக்கு பிரிந்திரநாத் சன்யால் வெளிநாட்டு பெண்களை சப்ளை செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம் என்றனர்.

சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ஒருவரின் திருமண வரவேற்பு விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழா முன்னாள் ராணுவ தளபதி அஜய்அகல்வாத்தின் பண்ணையில் நடந்தது. வரவேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பிரிந்திரநாத் சன்யால் செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அவருடன் தொடர்பில் இருந்த ராணுவ தளபதி அஜல் அகல்வாத்தையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பிரிந்திரநாத் சன்யாலை காவல்துறையினர் கைது செய்து 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பெண் கடத்தல், விபச்சாரம், ஆள்மாறாட்டம் செய்தல், கிரிமினல் சதித்திட்டம் ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவர் வீட்டில் கைப்பற்றிய எம்.பி.க்கள் லெட்டர் பேடு, சமாஜ்வாடி கட்சி எம்.பி. நரேஷ் அகர்வால் மற்றும் பா. ஜனதா எம்.பி. ஜெகதாம்பிகா பால் ஆகியோருடையது என்பது தெரியவந்தது

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval