மும்பையில் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்கு உதவிய இந்து ஆட்டோ ஓட்டுனரை பலரும் சமூக வலைதளம் வாயிலாக பாராட்டி வருகின்றனர்.
மும்பையில் பணிபுரியும் ரமீஸ் சேக் எனும் இளைஞர் தொழுகைக்காகத் தனது அலுவலகத்தில் இருந்து மசூதிக்குச் செல்ல ஆட்டோ ஒன்றில் பயணித்துள்ளார். ஆட்டோவில் ஏறிய பின்னரே மணி பர்ஸை அலுவலகத்தில் மறந்துவைத்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனரிடம் தெரிவித்த ரமீஸ், தொழுகை முடியும்வரை காத்திருக்கும்படியும் அதற்கான கட்டணத்தையும் அலுவலகம் சென்ற பின்னர் கொடுப்பதாகத் தெரிவித்தார்.
ரமீஸின் இந்த கோரிக்கையைக் கேட்ட ஆட்டோ ஓட்டுனர், கடவுளைத் தொழ வந்த இடத்தில் மன நிம்மதியின்றி, அவசரஅவசரமாக வேண்டிக் கொள்ள வேண்டாம் என்று கூறியதுடன் மசூதியிலிருந்து அலுவலகத்துக்குச் செல்ல உதவியாக ரமீஸுக்கு பணமும் கொடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரமீஸ், விநாயகரின் தீவிர பக்தரான அந்த ஓட்டுனரின் மனிதநேயமிக்க செயல் தன்னை நெகிழச்செய்து விட்டதாக பதிவு செய்துள்ளார். மேலும், சுக்லா எனும் அந்த ஆட்டோ ஓட்டுனரின் செயல்பாடு மதநல்லிணக்கத்துக்கு முன்மாதிரியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பதிவு பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval