Tuesday, August 23, 2016

இந்தியாவின் பெஸ்ட் சிஎம் யார் தெரியுமா? இந்தியா டுடே சுவாரசிய சர்வே


Image result for kejriwal images downloadடெல்லி: இந்தியாவின் சிறந்த முதல்வராக நிதிஷ் குமாரையும், அரவிந்த் கேஜ்ரிவாலையும் மக்கள் தேர்ந்தெடுத்திருப்பதாக இந்தியா டுடே சர்வே கூறுகிறது. 'மூட் ஆப் தி நேஷன்' என்ற பெயரில், இந்தியா டுடே-கார்வே இன்சைட்ஸ் சார்பில், ஜூலை 15-27க்கு இடைப்பட்ட காலத்தில், 19 மாநிலங்களில், 97 லோக்சபா தொகுதிகளில், 12 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட பிரமாண்ட சர்வே முடிவில் இந்த சுவாரசிய முடிவுகள் வெளியாகியுள்ளன. *மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் 7 சதவீத ஆதரவுடன் 3வது இடத்தில் உள்ளார் *மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 10 சதவீத ஆதரவுடன் 2வது இடத்தில் உள்ளார் *டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தலா 14 சதவீத ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளனர் *சொந்த மாநிலத்திலுள்ள மக்களின் கருத்து அடிப்படையில் மட்டும் பார்த்தால், டெல்லியில் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு குறைந்துள்ளது. ஆனால் பீகாரில் நிதீஷ்குமாருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. *சிவராஜ்சிங் சவுகான், சட்டீஸ்கர் முதல்வர் ரமன் சிங், நிதீஷ்குமார் ஆகியோருக்குத்தான், அவர்களின் சொந்த மாநிலத்தில் ஆதரவு அதிகரித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட பிற மாநில முதல்வர்கள் இவர்களுக்கு பின்னால் இருப்பதால் அதை கருத்து கணிப்பில் தெரிவிக்கவில்லை.
courtesy;oneIndia

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval