Thursday, August 11, 2016

14 நாட்களில் 7 கிலோ எடை குறைத்து, சிக்கென்று மாறிய இந்த பெண் மேற்கொண்ட டயட் என்ன தெரியுமா?

உடல் எடையால் அவஸ்தைப்பட்டு, அதைக் குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு, அவற்றில் பலர் தோல்வியை சந்தித்தாலும், சிலர் சரியான டயட்டைத் தேர்ந்தெடுத்து பின்பற்றி, வெற்றி கண்டுள்ளனர். உடல் எடையைக் குறைக்க எத்தனையோ டயட்டுகள் உள்ளன. அந்த டயட்டுகளில் சில கடுமையாக இருந்தாலும், சில எளிமையாக இருக்கும்.

அப்படிப்பட்ட எளிமையான டயட்டுகளில் ஒன்று தான் வெள்ளரிக்காய் டயட். இந்த டயட்டின் ஸ்பெஷல், இதில் வெள்ளரிக்காயை மட்டுமின்றி, அனைத்து உணவுகளையும் உட்கொள்ளலாம் என்பது தான்.

இந்த டயட்டைப் பின்பற்றி ஒரு பெண் 14 நாட்களில் கிலோ எடையைக் குறைத்துள்ளார். சரி, இப்போது அந்த பெண் பின்பற்றிய வெள்ளரிக்காய் டயட் குறித்து காண்போம்.

* 150 கிராம் டூனா மீன், 2 வேக வைத்த முட்டை.

* 3 துண்டு கோதுமை பிரட் அல்லது 2 பெரிய வேக வைத்த உருளைக்கிழங்கு.

* 1/2 கிலோ நற்பதமான பழங்கள்

* சர்க்கரை இல்லாத டீ, காபி

* சோடா பானங்கள் மற்றும் மதுவை அறவே தொடக்கூடாது.

வெள்ளரிக்காய் டயட்டின் போது, நற்பதமான வெள்ளரிக்காய் சாலட் அல்லது வெள்ளரிக்காய் ஷேக் சாப்பிடலாம். முக்கியமாக இந்த டயட்டின் ஸ்பெஷல், இவை இரண்டையும் இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதும் இல்லை.www.visarnews.com

காலை உணவு: 1 கப் வெள்ளரிக்காய் சாலட் மற்றும் 2 வேக வைத்த முட்டை

11 மணியளவில்: 1 பெரிய ஆப்பிள், 1 பீச் அல்லது 5 ப்ளம்ஸ் (200 கிராம்)

மதிய உணவு: கோதுமை பிரட் டோஸ்ட் மற்றும் 1 பௌல் வெள்ளரிக்காய் சாலட்

4-5 மணியளவில்: வெள்ளரிக்காய் ஷேக்

இரவு உணவு: உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு பழம் (300 கிராம்)

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 400 கிராம்புளித்த தயிர் – 200 மிலிஉப்பு – சிறிதுவெங்காயம் – சிறிது (நறுக்கியது)

வெள்ளரிக்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது உப்பு சேர்த்து கிளறி, தயிர் சேர்த்து நன்கு கலந்து, சிறிது வெங்காயத்தை தூவினால், வெள்ளரிக்காய் சாலட் ரெடி!www.visarnews.com

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் – 1பசலைக்கீரை – 1 கையளவுவெள்ளரிக்காய் – 1இஞ்சி – சிறிதுபாதாம், வால்நட்ஸ் – சிறிது

முதலில் ஆப்பிள், பசலைக்கீரை, வெள்ளரிக்காய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து, பின் டளம்ரில் ஊற்றி, மேலே சிறிது பாதாம் மற்றும் வால்நட்ஸ் தூவி, உடனே பருக வேண்டும்.

இந்த பானத்தில் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் அதிகம் உள்ளது. அதிலும் இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் பி, ஈ மற்றும் சி போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

வெள்ளரிக்காய் டயட் சிம்பிளாக இருந்தாலும், இந்த டயட்டைப் பின்பற்றும் போது தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதிலும் 30 நிமிட வேகமான நடைப்பயிற்சி மிகவும் சிறப்பானது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval