Friday, August 19, 2016

5 நிமிடம் ஊறி, பின் 5 நிமிடம் கொதிக்க‍ வைத்த கிராம்பு நீரை குடித்தால் . . .

ஒரு டம்ளர் அளவு நீரை ஒரு சிறு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் கிராம்பு 6அல்ல‍து 7போட்டு ஒரு 5 நிமிடம் ஊற வைக்க‍வேண்டும். அதன் பிறகு அந்த
கிராம்பு நீர் உள்ள‍ பாத்திரத்தை ஸ்டவ் பற்ற‍வைத்து அதில் வைத்து நன்றாக கொதிக்க‍வையுங்கள். கொதிக்க‍ வைத்த‍ கிராம்புநீரை வடிகட்டி துணையுடன் வடிக்க‍ட்டுங்ள். அந்த வடிந்த கிராம்பு நீர் கிடைக்கும். அதன் பிறகு மித மான சூட்டில் அதாவது குடிக்கும்பதத்தில் எடுத்து தலை வலியால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், உயர் ரத்த‍ அழுத்த‍ம் உடையவர்கள், சீரற்ற‍ இரத்த‍ ஓட்ட‍ம் இருப்ப‍வர்கள், இதயத்தில் சிறு சிறு பாதிப்புள்ள‍வர்கள், அஜீரணத்தால் அவதிப்படுபவர்கள் ஆகியோர் குடித்தால் தலை
வலி பறந்துபோகும், உயர்ரத்த‍ அழுத்த‍ ம் சாதாரண நிலைக்கும் திரும்பும், சீரற்ற‍ இரத்த‍ ஓட்ட‍ம் சீராகும், இதயம் நலம்பெறும், அஜீரணம் காணாமல் போய் பசி எடுக்கும் என்கிறது சித்த மருத்துவம். 

மேலும் பற்களின் ஆரோக்கியம் மேம்படும், கல்லீரலு ம் பலம்பெறும், கணையம் முழு அளவில் ஆரோக்கிய த்தை பெறும் என்றும் சொல்கிறது சித்த மருத்துவம்.  பெண்களுக்கு ஆரோக்கியத்தையும் தசுறுசுறுப்பையு ம் தரும்
மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ள‍வும்.
courtesy;Netrigun

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval