மதுரை தெப்பக்குளம் B3 ஸ்டேஷன் காவல் ஆய்வாளர் திரு. சேதுமணி மாதவன் அவர்களுக்கு ஒரு சல்யூட் அடிச்சிட்டு படிங்க மக்களே...
இன்னிக்கு ஒரு ஃபங்ஷன்ல இவரும் ஒரு சிறப்பு அழைப்பாளர். ஒரு போலீஸ் பெருசா என்ன பேசிரப்போறார்... வழக்கம்போல அழைத்தமைக்கு நன்றி. விழா சிறக்கட்டும்ன்னு பேசுவார்ன்னு பார்த்தா, மனுஷன் பேசியே அசத்திட்டாரு.
"லஞ்சம் தவிர் - நெஞ்சம் நிமிர்"-ன்னு
வாழறவன் நான்.அதனால பொதுமக்களும் ஒதுழைப்பு கொடுங்கன்னு ஆரம்பிச்சார் பாக்கணும்..செம க்ளாப்ஸ்.
வாழறவன் நான்.அதனால பொதுமக்களும் ஒதுழைப்பு கொடுங்கன்னு ஆரம்பிச்சார் பாக்கணும்..செம க்ளாப்ஸ்.
உங்க வேல முடியணும்னு நீங்க குடுத்து பழகாதீங்க... இடைத்தரகர் போல யாரையும் சிபாரிசுக்கு கூட்டிட்டு வராதீங்க. இதோ இந்த அண்ணாச்சி கடைல அவர் சொல்ற விலைதான் பொருளுக்கு.. அவர் அப்பாட்ட போய் பேச முடியாது.புகார் சொல்ல முடியாது. புடிக்கலன்னா போய்ட்டே இருன்னு சொல்வாரு.. ஆனா போலீஸ் துறைல நான் சரியில்லன்னா எனக்கு மேல , அதுக்கும் மேல ..அதுக்கும் மேலன்னு அதிகாரிகள் கிட்ட புகார் சொல்லலாம் உங்களுக்கு நியாயம் கிடைக்கிற வரை போகலாம்.
சரி... பெண்கள் கிட்ட ஒரு கேள்வி .. நீங்க வீட்ல தனியா இருக்கும்ப்போது அறிமுகமுல்லாத ஆள் வந்து காலிங் பெல் அடிச்சி கூப்ட்டு அட்ரஸோ அல்லது ஏதோ விபரம் கேக்கறார்.. என்ன பண்ணுவீங்க? சரியா சொன்னா 500 ரூபா.. அதை இந்த இந்த விழா தலைவர் தருவார்(அங்கனயே ஸ்பான்ஸர் பிடிச்சுட்டார் திறமையா)
ஒருபெண் எழுந்து,..." ம்... என் வீட்டுக்காரருக்கு போன் பண்ணுவேன் .கதவை திறக்க மாட்டேன் ..."
குட்... அப்புறம்...
போன் போட்டு விபரம் சொல்லி அந்தாள்கிட்ட கம்பி இடைவெளி வழியா குடுப்பேன்....(உடனே இன்னொரு பெண்) இல்ல லவுட் ஸ்பீக்கர் ஆன் பண்ணி பேசச்சொல்லுவேன் .
குட்.... (அந்தப்பொண்ணுக்கு 500 பரிசு குடுத்துட்டாரு விழா தலைவர்)
அடுத்து, சைல்டு ஹெல்ப் லைன், அவசர போலீஸ், ஆம்புலன்ஸ் இப்டி முக்கியமான தொடர்பு எண்களை எல்லாம் கேட்டு பதில் சொன்னா பரிசுன்னார்....
ஒவ்வொரு தெருவுலயும் எல்லா வீடுகளும் கூடிப்பேசி சிசிடிவி கேமரா வைக்கணும்ன்னார். அதுக்கான நடவடிக்கை எடுத்துட்டு இருக்கறதாவும் சொன்னார்.
இடையிடையே வடிவேல் காமெடி சொல்லி அந்த மாதிரி போலீஸ்னு நினைக்காதீங்கன்னு கமெண்ட் வேற..
இளைஞர்கள் ,பெண்கள்ன்னு எல்லாருக்கும் பாதுகாப்பு டிப்ஸ். முக்கியமா சீரியல் பாக்கற டைமை குறைங்கன்னார்...
இப்டி குடும்பம் குடும்பமா ஃபங்ஷனுக்கு வந்தா எவ்ளோ நல்லாருக்கு.குடும்பத்தோட அதிக நேரம் ஸ்பெண்ட் பண்றவன் தப்பு பண்ண மாட்டான்.. இங்க இருக்கற பசங்களப்பாருங்க நீட்டா ட்ரெஸ் பண்ணி தலைல பெயிண்ட் இல்லாம ஒரு காது தோடு இல்லாம, விபூதி சந்தனம்லாம் வெச்சு பளிச்சுன்னு இருக்கான் சந்தோஷமா இருக்குய்யா....
லேட் நைட் ஊர்சுத்தாதீங்கப்பா.. தனித்தனியா எல்லாரும் நல்லவந்தான் செட்டு சேர்ந்தா தான் தப்பு பண்ணத்தோணுது..
அதேபோல் ஊருக்கு போறதா இருந்தா பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லிட்டு போங்க .போலீஸ் தினம் நாலுவாட்டி வந்து தெருப்பக்கம் செக் பண்ணுவாங்க... நீங்க சொல்லிட்டுப்போயும் திருட்டு போச்சுன்னா சம்மந்தப்பட்ட அதிகாரிதான் அதுக்கு பொறுப்பேத்துக்கிட்டு ஈடு செய்யணும் தெரியுமா உங்களுக்குன்னார்... (அட இது தெரியாதே)
நாங்கல்லாம் ஃப்ரெண்ட்லி போலீஸ் யா. போலீஸ் பொதுமக்கள் நண்பர்கள் குரூப்ல சேர விரும்புறவங்க ஸ்டேஷன்ல வந்து பாருங்க.... நாங்க சில ட்ரெய்னிங்க்லாம் குடுக்குறோம். ஏழை பசங்க படிக்கறதுக்கு கூட சிலர் மூலமா உதவி வாங்கித் தர்றொம்.
தயங்காம வந்து எங்கள அணுகுங்க.மதுரை சிட்டி போலீஸ் ஆப்ஸ. உங்க ஆன்ட்ராய்டு மொபைல்ல டவுன்லோடு பண்ணி உங்க டீட்டெயில் பதிவு பண்ணி வெச்சுக்கோங்க... உங்களுக்கு பிரச்சினைன்னா உங்க மொபைல் ஜிபி.எஸ் ஆன் பண்ணா போதும். போலீஸ் உதவி செய்ய தேடி வரும்.
இது ஸ்டேஷன் நம்பர்... இது என் நம்பர் .... காண்டாக்ட் பண்ணுங்க. அதுக்குன்னு விவேக் காமெடி மாதிரி நைட்டு ஒருமணிக்கு கால் பண்ணி செக் பண்ணாதீங்க...பக்கத்து வீட்டு காம்பவுண்ட் பிரச்சனைக்கெல்லாம் கூப்டாதீங்க.
என்றெல்லாம் சொல்லிவிட்டு இதுபோல் பொதுமக்கள் கூடும் விழா என்றால் பணிச்சுமைக்கிடையிலும் வந்துவிடுவதாகவும் அப்போதுதான் இது போன்ற விழிப்புணர்வு விஷயங்களைச் சொல்ல முடிவதாகவும் சொன்னார்.
கணவன் மனைவி சண்டை பற்றிகூட காமெடியாக உதாரணம் கூறிப்
பேசினார்...
பேசினார்...
முத்தாய்ப்பாக எந்த விழா என்றாலும் பொன்னாடை போர்த்துவதும் பெற்றுக்கொள்வதும் பழக்கமில்லை .புத்தகங்கள்தான் கொடுப்பேன்... பெறுவேன் என்றார்...
உதாரண போலீஸ்... இவரிடம் வேலை செய்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... மேடையில் பாருங்கள் எல்லோரும் வாய்விட்டுச்சிரிப்பதை....
இவர் போன்றவர்கள் கிடைத்தது மதுரைக்குப்பெருமை.... வாழ்த்துவோம் நண்பர்களே...
ஹாட்ஸ் ஆஃப் சார்.... !
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval