Saturday, March 1, 2014

பெங்களூரில் எலக்ட்ரிக் பஸ் சோதனை

நாட்டிலேயே முதல்முறையாக எலக்ட்ரிக் பஸ் சேவை பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு சோதனை முறையில் இயக்கப்படும் இந்த பஸ் சேவையை கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி துவங்கி வைத்தார்.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு தராத அம்சம் கொண்ட இந்த பஸ் சேவை வெற்றிபெற்றால் அதிக அளவில் எலக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்யவும் பெங்களூர் மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. பஸ் இயக்கப்படும் வழித்தடம், கட்டண விபரம் மற்றும் பஸ்சின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

வழித்தடம்

பெங்களூர், மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து காடுகோடி வரையில் 335E என்ற வழித்தடத்தில் இந்த புதிய எலக்ட்ரிக் பஸ் இயக்கப்படுகிறது. தினசரி 6 முறை இந்த பஸ் இயக்கப்படும். இதுதவிர, சர்வதேச விமான நிலையம் உள்பட பல்வேறு புதிய வழித்தடங்களில் இந்த எலக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கும் பிஎம்டிசி திட்டமிட்டுள்ளது.

கட்டணம்

குளிர்சாதன வசதி கொண்ட இந்த பேருந்தில் வால்வோ பஸ்களில் வசூலிக்கப்படும் அதே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து காடுகோடி வரை ரூ.80 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருக்கை வசதி

இந்த மாநகர சொகுசு பஸ்சில் 36 இருக்கைகள் உள்ளன.

சார்ஜ் ஸ்டேஷன்

மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருக்கும் வால்வோ பஸ் பணிமனையில் இந்த பஸ்சுக்கான பேட்டரி சார்ஜ் செய்யும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை முழு சார்ஜ் ஆவதற்கு 4 முதல் 6 மணி நேரம் பிடிக்கும்.

ரேஞ்ச்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிமீ வரை பயணிக்கும். மேலும், பேட்டரியில் இயங்குவதால் கார்பன் புகை வெளியிடாது என்பதால், சுற்றுச்சூழலுக்கு தீங்கு தராது.


சீன தயாரிப்பு

சீனாவை சேர்ந்த சென்ஸென் பிஒய்டி நிறுவனத்தின் தயாரிப்பு இது. அமெரிக்கா, ஸ்பெயின் உள்பட பல வெளிநாடுகளில் இந்த பஸ் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. 12 மீட்டர் நீளம் கொண்ட இந்த பஸ் 14.3 டன் எடை கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 96 கிமீ வேகத்தில் செல்லும்.

விலை

ரூ.2.7 கோடி விலையில் இந்த புதிய எலக்ட்ரிக் பஸ்சை பிஎம்டிசி வாங்கியிருக்கிறது. அதேவேளை, ஒரு கிலோமீட்டர் இந்த பஸ்சை இயக்குவதற்கு ரூ.4 மட்டும செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு செலவும் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Thank you : http://tamil.drivespark.com/


    தகவல் ;N .K .M .புரோஜ்கான் 
    அதிரை 

    No comments:

    Post a Comment

    கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

    கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

    Your comment will be published after approval