Sunday, March 2, 2014

தமிழ்ப் பழமொழிகள் PART 4

 கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
•  கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
•  கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
•  கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
•  கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
•  கடல் திடலாகும், திடல் கடலாகும்.
•  கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
•  கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
•  கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
•  கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
•  கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
•  கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
•  கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
•  கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
•  கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
•  கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
•  கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
•  கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
•  கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
•  கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
•  கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
•  கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
•  கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
•  கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
•  கண் கண்டது கை செய்யும்.
•  கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.
•  கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
•  கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
•  கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
•  கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
•  கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
•  கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
•  கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
•  கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
•  கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
•  கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
•  கரணம் தப்பினால் மரணம்.
•  கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
•  கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
•  கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
•  கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
•  கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?
•  கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
•  கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
•  கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
•  கல்லாடம் படித்தவனோடு மல் ஆடாதே.
•  கல்லாதவரே கண்ணில்லாதவர்.
•  கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
•  கல்வி அழகே அழகு.
•  கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
•  கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
•  கல்விக்கு அழகு கசடர மொழிதல்.
•  கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
•  கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
•  களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
•  கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
•  கள்ள மனம் துள்ளும்.
•  கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியும் மட்டும் திருடலாம்.
•  கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
•  கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
•  கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
•  கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
•  கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
•  கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
•  கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
•  கனிந்த பழம் தானே விழும்.
•  கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
•  கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
•  கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கா

•  காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும், காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
•  காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
•  காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
•  காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
•  காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
•  காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
•  காணி ஆசை கோடி கேடு.
•  காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
•  காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
•  காப்பு சொல்லும் கை மெலிவை.
•  காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
•  காய்த்த மரம் கல் அடிபடும்.
•  காய்ந்தும் கெடுத்தது, பெய்தும் கெடுத்தது.
•  காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
•  காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
•  கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
•  காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
•  காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்.
•  காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
•  காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
•  காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்.
•  காற்றில்லாமல் தூசி பறக்குமா?
•  காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
•  காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

Tamil Proverbs - தமிழ்ப் பழமொழிகள் - கி, கீ, கு, கூ

•  கிட்டாதாயின் வெட்டென மற.
•  கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
•  கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
•  கீர்த்தியால் பசி தீருமா?
•  கீறி ஆற்றினால் புண் ஆறும்.
•  குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
•  குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
•  குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
•  குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
•  குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
•  குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும்.
•  குணத்தை மாற்றக் குருவில்லை.
•  குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
•  குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
•  குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
•  குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
•  குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
•  குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
•  குப்பை உயரும் கோபுரம் தாழும்.
•  குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
•  குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
•  குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
•  குரைக்கிற நாய் கடிக்காது.
•  குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
•  குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
•  குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
•  குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
•  குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
•  குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
•  குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
•  குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
•  கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
•  குரங்கின் கைப் பூமாலை.
•  குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
•  குரு இலார்க்கு வித்தையுமில்லை, முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
•  குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்.
•  கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
•  கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
•  கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
•  கூழானாலும் குளித்துக் குடி; கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
•  கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குக்குத் தேங்காய் கொண்டாட்டம்.
•  கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை  

    தகவல் ;N .K .M .புரோஜ்கான் 
அதிரை.
   

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval