Monday, March 3, 2014

பொது அறிவு கேள்வி பதில்கள்



சில பயனுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள்:

1.  ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
திரு. சரண்சிங்.

2.  உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஜூன் 5
.

3.  மனித உடலில் வியர்க்காத பகுதி எது?
உதடு.

4.  ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?
கிட்டத்தட்ட 2.5  ஏக்கர்.

5.  வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?
அராக்கிஸ் ஹைபோஜியா.

6.  பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
விஷ்ணு சர்மா.

7.  வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில்  பகலும், இரவும் சரியாக 
12  மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்? 
மார்ச்சு 21.

8.  மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?
22 .

9.  ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது? 
நாக்கு.

10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது? 
மோகனாங்கி.

11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது? 
வெங்காயம்.

12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது? 
மூன்றாம் பிறை.

13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்? 
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.

14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது? 
அலகாபாத்.

http://onlytamiltamil.blogspot.in/

    தகவல் ;N .K .M .புரோஜ்கான் 
    அதிரை 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval