Wednesday, March 5, 2014

இன்றைய தகவல்

பந்திக்கு முந்து படைக்கு பிந்து 

நம்மில் நிறையப் பேருக்கு இது ஒரு பழமொழி. இதற்கு நாம் அறிந்த அர்த்தம் பந்திக்கு முந்திக் கொண்டு முதலிலேயே சாப்பிட செல்ல வேண்டும். இல்லையெனில் அடுத்த பந்தியில் சாப்பாட்டில் குறைவு ஏற்படலாம். படைக்கு பிந்து. போர் நடக்கும் இடத்தில் இருந்து ஒளிந்துக் கொள். 

உண்மையில் இது பழமொழி அல்ல. விடுகதை. 
பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் அது என்ன? 
விடை "வலது கை" 

பந்தியில் சாப்பிடும் போது வலது கை முந்திக் கொண்டு (முன்னோக்கி) வர வேண்டும். போர் படையில் சண்டை இடும் போது வில்லில் அம்பை வைத்து வலது கை பிந்தி கொண்டு(பின்னோக்கி சென்று) அம்பை எய்த வேண்டும். 

இதைத் தான் நம் முன்னோர்கள் பந்திக்கு முந்தவும் படைக்கு பிந்தவும் வேண்டும் என்றார்கள். 

படித்ததில் ரசித்தது ..

Thank you : http://eluthu.com/
தகவல் ;N.K .M .புரோஜ்கான் 
அதிரை 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval