ஆனால் மாலை 5 மணி அளவில் திடீரென்று புயல் காற்று வீசியது. சற்று நேரத்தில் அது புழுதிப் புயலாக மாறியது.
பின்னர், மணிக்கு 100 கி.மீ வேகத்தில் புழுதிப் புயலின் சீற்றம் காணப்பட்டது. இது சாலைகளிலும், தெருக்களிலும் சென்று கொண்டிருந்த மக்களை திணற வைத்தது.
இதனால் மக்கள் பாதுகாப்பான இடம் தேடி ஓட்டம் பிடித்தனர். குறிப்பாக கிழக்கு டெல்லி, நொய்டா பகுதிகளில் புழுதிப் புயலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.
மேலும், டெல்லி முழுவதும் ஆங்காங்கே சுமார் 350 முதல் 400 மரங்கள் வரை வேரோடு சரிந்து விழுந்தன.
இதன் காரணமாக சாலை, ரயில் போக்குவரத்து முடங்கியது. இதையடுத்து சிறிது நேரத்தில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், போக்குவரத்து இல்லாமல், மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் டெல்லி மக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று மாலை கடுமையாக பாதிக்கப்பட்டதோடு,
புழுதிப் புயலில் சிக்கி டெல்லியில் 9 பேரும், காசியாபாத்தில் 3 பேரும் பலியாகியுள்ளனர்.
புழுதிப் புயலில் சிக்கி டெல்லியில் 9 பேரும், காசியாபாத்தில் 3 பேரும் பலியாகியுள்ளனர்.
மேலும், புழுதிப் புயலின் தாக்கம் அடுத்த 2 நாட்களில் மீண்டும் ஏற்படலாம் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளதால், டெல்லி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval