Thursday, May 29, 2014

அடுத்தடுத்த சவால்கள்… சாதிப்பாரா… சமாளிப்பாரா? மோடி

60395146மகத்தான வாக்குகள்…யாரும் இப்படி ஒரு அபரிமித இடங்களை பெற்றதில்லை என்ற அறுதிப்பெரும்பான்மையை தாண்டிய எண்ணிக்கை…நாடாளுமன்றத்தில் எங்கு திரும்பினாலும் பாஜ தலைகள்…உலக தலைவர்கள் வியக்க, தெற்காசிய தலைவர்கள் பங்கேற்க…எல்லோரும் மெச்சும் அளவுக்கு பிரமாண்ட அளவில் முடிந்து விட்டது பதவியேற்பு வைபவம்…
இனி…மோடியின் முதல் நாள்…மோடியின் மூன்று மாதம்…மோடியின் நூறு நாள் என்று கவுன்ட் டவுண் போட்டு விடும் மீடியா. மோடி அரசை முதல் நாளே வரவேற்க அதிகாரிகள் மட்டுமல்ல, விஐபிக்கள் மட்டுமல்ல…காத்திருப்பது சவால்களும் தான். இன்னும் சொல்லப்போனால், சவாலை இனி தான் எதிர்கொள்ளப்போகிறார். பிரசாரத்தில் வாக்குறுதிகள் கொடுத்தாகி விட்டது; இனி செயல்படுத்த வேண்டிய பொறுப்பில் அவர். மோடி அரசுக்கு காத்திருக்கும் சவால்களை எதிர்கொள்ளப்போவது எப்படி?
* தலை கிறுகிறுக்க எகிறிப்போன விலைவாசி…
* கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கும் பணவீக்கம்…
* அமெரிக்க டாலருக்கு ஈடான ரூபாய் கரன்சியின் மதிப்பு சரிவு…
* முடங்கிப்போன திட்டங்கள், தூசி தட்டப்பட வேண்டிய பைல்கள்… இப்படி ஏகப்பட்டவை கிளற வேண்டியவை காத்திருக்கின்றன.
‘370’ஐ தொடுவாரா மோடி?
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியல் சட்டம் 370. இது பற்றி அவ்வப்போது சர்ச்சை இருந்து வருகிறது. பிரதமர் அலுவலக இணை அமைச்சராக பொறுப்பேற்று இருப்பவர் ஜிதேந்திர சிங். ‘இந்த சட்டத்தை நாங்கள் வாபஸ் பெற மாட்டோம். அதற்கு முன் பொது விவாதத்துக்கு விடுவோம். இது ஒரு முக்கிய, பொதுமக்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயம்’ என்று கூறியுள்ளார்.
courtesy;indiatodayinfo


No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval