மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைந்துள்ளதால் இம்முறை ராமர் கோயில் கட்டுவது உறுதி என விஷ்வ ஹிந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால்அறிவித்துள்ளார்.
இந்தியாவின் புதிய பிரதமராக மே 26 ஆம் தேதி மோடி பதவியேற்க உள்ளார். இந்நிலையில்இம்முறை அமைய இருக்கும் பாஜக ஆட்சியில் ராமர் கோயில் நிச்சயமாக கட்டப்படும் என அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது,
இந்துத்துவாவை வலுப்படுத்தும் வகையில் நரேந்திர மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் வலுவான ஆட்சி அமைந்திருப்பதால் இம்முறை ராமர் கோயிலும் வலுவாக கட்டப்படும்என்று தெரிவித்தார்.
மேலும்கல்வி முறையிலும் பாஜக பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர்பொது சிவில் சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். கங்கை நதியை புனிதப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் விடுத்தார்.
அசோக் சிங்காலின் இந்த அறிவிப்பு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் கட்டுதல், பொது சிவில் சட்டம் கொண்டு வருதல் முதலான விசயங்களும் உள்ளடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
courtesy;todayindia.info
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval