Saturday, May 3, 2014

சுதந்திர போராட்ட வீரர் வ .உ .சி பற்றிய சுவாரசியமான தகவல் !!

சுதந்திர போராட்ட வீரர் வ .உ .சி பற்றிய தகவல் !!!!நவம்பர் 18 ‘கப்பலோட்டிய தமிழன்’வள்ளிநாயகம் உலகநாத சிதம்பரம் பிள்ளை மறைந்த தினம் இன்று. வ.உ.சிதம்பரம்பிள்ளை ஒரு மாபெரும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர். அவர் தான் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். அவருடைய செயல்பாடுகளால் ஆங்கிலேயர்கள் நெருப்பின் மேல் அமர்ந்திருப்பது போல் தவித்தனர். அவர் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.

வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். திறமையான எழுத்தாளர், ஆற்றல் மிக்க பேச்சாளர், தன்னலமில்லா தொழிற்சங்கத் தலைவர், துணிவுடைய சுதந்திரப் போராட்ட வீரர். வ.உ.சி. யின் வாழ்க்கைச் சரித்திரமானது, இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்காக அவர் செய்த தியாகங்கள், அவரது போராட்டங்கள், அவர் அனுபவித்த துயரங்கள் இவற்றால் நிறைந்தது. வ.உ.சி. யின் அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது.அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார். அவரது குணநலன்களை உலகம் போற்றுகிறது. இதே வேலையில் நாம் இன்னும் ஒருவரை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் அவர்தான் பக்கிர் முஹம்மத் .வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்களுக்கும் கப்பல் வாங்குவதற்கு உறுதுணையாக இருந்தவர் பக்கிர் முஹம்மத் :கப்பலோட்டிய தமிழனை மக்களுக்கு தெர்யும் கப்பலோட்டிய தமிழன் உதவிய வள்ளல் பக்கிர் முஹம்மத்யை மக்கள் அறிவார்களா ?ஆம் மகாகவி பாரதியார் தனது பத்திரிக்கை மூலமாக வேண்டுகோள் விடுத்ததில் கிடைத்த நன்கொடை சில நூறு ரூபாய்கள்தான்! ஆனால் வள்ளல் பக்கிர் முஹம்மத் அவர்கள் கப்பலோட்டியத் தமிழன் வ உ சி க்கு பத்து லட்சம் ரூபாய் கொடுத்து அவர்க்கு கப்பல் வாங்க உதவினார் இந்த செய்தியை எந்த வரலாறு புத்தத்தில்லாவது பதிவு செய்துள்ளர்களா ?இந்தியாவின் கவுரவத்தை தாங்கிப் பிடித்த வள்ளல் ஹாஜி பக்கீர் முஹம்மதைத் தெரிய முடியாதளவுக்கு இருட்டடிப்பு செய்து ஏமாற்றப்பட்ட துரோக வரலாற்றை நிணைவு கூர்ந்து கொள்ளுங்கள்.உண்மையே மறைப்பது ரெம்ப கஷ்டம் அது ஒரு நாள் வெளி உலகுக்கு வந்தே தீரும்வ.உ.சி. ஒரு புகழ் பெற்ற வக்கீல். அவர் தமிழ் செய்யுள்கள் இயற்றியுள்ளார், கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் உள்ள அனேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். சுதந்திரப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அதனால் அவர் ஆங்கில நூல்களைப் படிக்கும் வழக்கம் உடையவர் என்பதையும் அறியலாம். வ.உ.சி. இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் பிரபலமானவர். இந்திய மக்களால் அறியப்பட்டவர். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டிலிருந்தே பாலகங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.
வ.உ.சி.யால் தொடங்கப்பட்ட தேசீய நிறுவனங்கள்
வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். அவர் ஆளுமை மிக்க மனிதர். அவர் “சுதேசி பிரச்சார சபை”, “தர்ம சங்க நெசவு சாலை”, “தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்”, “சுதேசிய பண்டக சாலை”, “வேளாண் சங்கம்” போன்றவற்றை ஏற்படுத்தினார்.
செக்கிழுத்த செம்மல்சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நூற்றார். அப்பொழுது அவரது உள்ளங்கைகளில் இருந்து ரத்தம் கசிந்தது. கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார். அந்தப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒரு மாடு போல உழைத்தார். அவரது எடை மிகவும் குறைந்தது. மருத்துவர் சிறையதிகாரியை எச்சரித்தார்.உடனே அரிசி உணவு வழங்கப்பட்டது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அவர் சொந்த உணவை உண்ணலாம் என்று கூறியது.
வ. உ. சி. இழுத்த செக்கு சென்னை காந்தி மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.ஒரு நாள் வடுகுராமன் என்ற கைதி வ.உ.சி.யை வணங்கினார்.அதைப் பார்த்த சிறை அதிகாரி கோபமடைந்து வடுகுராமனிடம் இனிமேல் வ.உ.சி.யை வணங்கினால் செருப்பால் அடி கிடைக்கும் என்று கூறினார்.வடுகுராமன் சிறை அதிகாரியைக் கொலை செய்ய முடிவு செய்தான். வ.உ.சி. கொலை செய்வதைத் தடுத்துவிட்டார். ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம் சிறைக் கைதிகள் கலவரம் செய்தனர். சிறை அதிகாரி கடுமையாகத் தாக்கப்பட்டார். சிறைக் கைதிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைத்தது. வ.உ.சி. அவரது நண்பர்களுக்கு எழுதி மேல்முறையீடு செய்து தண்டனக் காலத்தைக் குறைத்தார். வ.உ.சி. கைதிகள் பக்கம் சாட்சி கூறினார். அவர், சிறை அதிகாரி மிக மோசமான உணவை வழங்கியும் கடுமயாக அடித்தும் மக்களைக் கொடுமைப்படுத்தியும் கொடூரமாக நடந்து கொண்டதே கலவரத்திற்கான காரணம் என்று கூறினார்.
சிறை இயக்குநர் ஒரு நாள் வ.உ.சி.யிடம் சிறை அலுவலராக பணியேற்றுக் கொண்டால் தண்டனைக் காலம் குறையும் என்றும் இன்னும் பல நன்மைகள் கிட்டும் என்றும் கூறினார். வ.உ.சி. அப்பதவியை மறுத்துவிட்டார். வ.உ.சி.கேரளாவில் உள்ள கண்ணனூர் சிறைக்கு மாற்றாப்பட்டார். அங்கே சிறைக்கைதிகளுக்கு ஒரு வித்தியாசமான தண்டனை கொடுக்கப்பட்டது. அவர்கள் கம்பளியால் போர்த்தப்பட்டு அடிக்கப்பட்டார்கள். வ.உ.சி.யை அச்சுறுத்த சிறை அதிகாரி ஒரு கொடூரமான சிறைக்கைதியை வ.உ.சி.யின் அறைக்கு வெளியே தூங்கும்படி செய்தார். வழக்கமாக அவன்தான் எல்லோரையும் அடிப்பான். ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் அவன் வ.உ.சி.யின் சீடனாகிவிட்டான்.
வ.உ.சி. தனது ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் நாட்டிற்காக அர்ப்பணித்தார். வேறெந்தத் தலைவரும் இவ்வளவு கடுமையான தண்டனை அனுபவிக்கவில்லை. வ.உ.சி. தன் தாய் நாட்டிற்காக எல்லா சிரமங்களையும் தாங்கிக் கொண்டார்.அவர் மிகவும் வலிமையானவர். அவரது தியாகம் தலை சிறந்தது. வ.உ.சி. கப்பல் ஓட்டியதிலும் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியதிலும் தொழிற்சங்கங்களை நிறுவுவதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார். அவருக்குக் கட்சி செயல்பாடுகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் கடைசி மூச்சு வரை காங்கிரஸ்காரராகவே இருந்தார். வ.உ.சி. உயந்த பண்புகளை உடையவராக இருந்தார். தமிழ் மொழி மீது அவருக்கு மிகுந்த விருப்பம் இருந்தது. அவர் சிறந்த புலமையும் ஆழ்ந்த அறிவும் உடையவராக இருந்தார். வ.உ.சி. ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்த இந்தியத் தலைவராவார்.
courtesy;todayindia.info

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval