Friday, May 23, 2014

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பாஹிரா பானு உட்பட 19 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்

akshaya-supplying-private-school-student-with-a-score-of-499-including-19-students-from-the-firstபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் தருமபுரி தனியார் பள்ளி மாணவி அக்ஷயா உட்பட 19 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். முதலிடம் பிடித்த 19 பேரில் 18 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடம் பிடித்த ஒரே மாணவரான மகேஷ் என்பவர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஆவார். 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று 125 பேர் 2வது இடத்தை பிடித்துள்ளனர். 3-வது இடத்தை 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 321 பேர் பகிர்ந்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நெல்லை மாவட்டம் பத்தமடை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பாஹிரா பானு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றவர்களில் ஒருவராகி சாதனை படைத்துள்ளார். பிளஸ் 2வில் உயிரியல் பாடம் எடுத்து பின் மருத்துவம் படிக்க அவர் ஆசை தெரிவித்துள்ளார். மாணவி பாஹிரா பானுவிற்கு ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் சாதனை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த 19 பேரில் 10 பேர் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த 10 பேரில் 8 பேர் மாணவிகள் ஆவர். இந்த 8 மாணவிகளும் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற இருவர் செந்தில் பள்ளியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அக்ஷயா,தீப்தி, காவியா,கிருத்திகா, மைவிழி, ரேவதி, சந்தியா, ஸ்ரீவந்தனா ஆகியோர் ஸ்ரீவிஜய் வித்யாலயா பள்ளி மாணவிகள் ஆவர். தருமபுரி செந்தில் பள்ளியைச் சேர்ந்த கயல்விழி, தீப்தியும் முதலிடம் பிடித்தனர்.
பாடவாரியாக முழுமதிப்பெண்கள் விவரம்;
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ்பாடத்தில் 255 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
ஆங்கிலத்தில் 677 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கணிதத்தில் 18,682 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அறிவியல் பாடத்தில் 69,560 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சமூக அறிவியல் பாடத்தில் 26,554 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval