மோடியை நேரில் சந்தித்து தனது கோரிக்கைகளை பேச முடியாமல் போனதால் மனமுடைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று சென்னை திரும்பியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த திங்கட்கிழமை மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன் டெல்லி சென்றார்.
பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தாலும், பின்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பது தெரிந்ததும், விழாவுக்கு விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் யாரும் செல்லவில்லை.
இந்நிலையில், பதவி ஏற்பு விழாவுக்கு வந்த போது விஜயகாந்தை டெல்லியில் பாஜக யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து, மோடியை தனியாக சந்தித்து பேச விஜயகாந்த் விரும்பினார். ஆனால் அதற்கும் முறையான அனுமதி கிடைக்கவில்லை.
விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மத்திய அமைச்சர் ஆவார் என்று தேர்தலின் போது பிரசாரம் செய்து இருந்தனர்.
எனவே சுதீசுக்கு பதவி பெறுவதற்காக மோடியை சந்திக்க காத்து இருந்தார், ஆனால் அதற்கும் பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில், 3வது நாளாக நேற்றும் மோடியை சந்திக்க அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, விஜயகாந்த், பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் நேற்று சென்னை திரும்பியுள்ளனர்.
courtesy;todayindiainfo
courtesy;todayindiainfo
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval