Wednesday, May 28, 2014

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியின் வேட்பு மனுக்களில் முரண்பட்ட தகவல்

983667
டெல்லி மேல்-சபை எம்.பி.யாக இருப்பவர், பிரபல டி.வி. நடிகை ஸ்மிரிதி இரானி. இவர், அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
ஸ்மிரிதி இரானிக்கு பா.ஜனதாவின் மந்திரி சபையில் மனித வள மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நேற்று டுவிட்டரில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் விமர்சித்து இருந்தார். அதில், மோடியின் மந்திரிசபை என்ன மாதிரியாக இருக்கிறது? ஸ்மிரிதி இரானி பட்டதாரி கூட கிடையாது. அவர், மத்திய மனித வள மேம்பாட்டு மந்திரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தேர்தல் கமிஷனுக்கு அவர் அளித்த பிரமாண பத்திரத்தின் 11-ம் பக்கத்தை பார்த்தால் அவரது படிப்பு பற்றி தெரியும். டெல்லி மேல்-சபை எம்.பி.யில் அவர் தனது கல்வித் தகுதியை மறைத்துவிட்டார். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தேர்தலின்போது கல்வி தகுபதி பற்றி தனது வேட்பு மனுக்களில் முரண்பட்ட தகவல்களை அளித்திருப்பது தெரிய வந்துள்ளது. 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட அவர் 1996-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில்(அஞ்சல் வழி கல்வி) பி.ஏ. படிப்பை முடித்ததாக தனது வேட்பு மனுவுடன் இணைத்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருந்தார்.


சமீபத்தில் முடிவடைந்த (2014-ம் ஆண்டு) பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்டபோது, 1994-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் பகுதி-1-ல்(அஞ்சல் வழிக்கல்வி) இளநிலை பட்டம் பெற்றிருப்பதாக வேட்பு மனுவுடன் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval