Thursday, May 1, 2014

காலத்திற்கும் கலைக்குமான முகாலய பேரரசு


Delhi Red Fortகாதலிற்கும், கட்டடக் கலைக்கும் அதிசயிக்கத்தக்க அழியாத சான்றாக இருந்துவரும் தாஜ்மஹால் என்ற அற்புதத்திற்கு அருகே, யமுனை நதிக்கரையிலுள்ள மற்றுமொரு பிரம்மாண்ட மானுடப் படைப்பாக திகழ்கிறது லால் கீலா என்றழைக்கப்படும் ஆக்ரா செங்கோட்டை.தாஜ் மஹாலைப் போல இதுவும் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு
வருகிறது . முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் கை வண்ணமே ஆக்ரா கோட்டையை, இந்த நாட்டிலுள்ள மற்ற கோட்டைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது .


இக்கோட்டையிலுள்ள மூசாம்மன் புர்ஜ், காஸ் மஹால் ஆகிய பகுதிகள் கட்டக் கலைக்கும், சிற்ப வேலைப்பாடுகளுக்கும் அழியாத சான்றாகத் திகழ்கின்றன . 

தனது காதல் மனைவி மும்தாஜ் இறந்தபின், அவளின் நினைவாக படைத்த தாஜ்மஹாலை – தனது வாழ்வின் கடைசி காலத்தில் தனது மகனால் இதே கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்தபோது – மூசாம்மன் புர்ஜ் கலைக்கூடத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தார் ஷாஜஹான் என்று வரலாறு கூறுகிறது . 
ஆக்ரா கோட்டைக்குள் ஷாஜஹான் கட்டிய அழகிய பகுதிகளில் எங்கிருந்து பார்த்தாலும் தாஜ்மஹாலின் உன்னத காட்சியைக் காணலாம். இன்றைக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இக்கோட்டைக்கு வருகிறார்கள் என்றால் அந்தப் பெருமையும் பேரரசர் ஷாஜஹானுக்கே உரியது. அதுவரை டெல்லி சுல்தான்களின் தலைநகராக டெல்லி மட்டுமே இருந்த நிலையில் ஆக்ராவை இரண்டாவது
தலைநகராக மாற்றினார் சிக்கந்தர் லோடி. சிக்கந்தர் மறைவிற்குப் பிறகு மகுடம் சூடிய அவருடைய மகனான இப்ராஹிம் லோடி 9 ஆண்டுக்காலம் இக்கோட்டையிலிருந்துதான் ஆட்சி புரிந்துள்ளார். 


Taj Mahal and New Delhi sights: Red Fort, Raj Ghat, India Gate ...        The Red Fort seems more adorned on the outside as compared to the Agra ...            red-fort-delhi.jpg

இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இக்கோட்டையில் பல கிணறுகள் வெட்டப்பட்டதாகவும், மசூதிகளும், அரண்மணைக் கூடங்களும் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. 1526ஆம் ஆண்டு நடந்த முதலாம் பானிபட்டுப் போரில் இப்ராஹிம் லோடியை முகலாய பேரரசர் பாபர் தோற்கடிக்க, ஆக்ரா கோட்டை முகலாயர் வசமானது. ஆக்ரா கோட்டையில் இப்ராஹிம் லோடி சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் – அதில் ஒன்றுதான்
இன்றளவும் பேசப்படும் கோஹினூர் வைரம் – முகலாய பேரரசு , பலமாக காலூன்ற உதவியது. 

பாபருக்குப் பின் ஹூமாயூன் இக்கோட்டையில்தான்(1530) முடி சூட்டப்பட்டார். பெலிகிராம் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்த ஆப்கானிய அரசர் ஷேர்ஷா கைவசமானது இக்கோட்டை . 1556இல் நடந்த இரண்டாவது பானிபட்டுப் போரில் வெற்றிபெற்று மீண்டும் முகலாய பேரரசு காலூன்றியது. ஹூமாயூனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற பேரரசர் அக்பர், தனது தலைநகரை டெல்லியிலிருந்து நிரந்தரமாக ஆக்ராவிற்கு
மாற்றினார் . இன்றைக்கு நாம் காணும் ஆக்ரா கோட்டை அக்பரால் கட்டப்பட்டதுதான். அதுவரை மண் கோட்டையாக இருந்த இக்கோட்டையை, சாண்ட்ஸ்டோன் என்றழைக்கப்படும் சிகப்பு பாறைக் கற்களைக் கொண்டு 8 ஆண்டுக் காலத்தில் (1573) கட்டி முடித்தார் அக்பர். இந்தக் கட்டுமானப் பணியில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 

யமுனை நதிக்கரையில், உயர்ந்த மதில் சுவர்களுடன் பலமாக கட்டப்பட்ட இக்கோட்டைக்குள் அக்பரின் தலைநகரமே இயங்கி வந்துள்ளது. அக்பருக்குப் பின் ஜெஹாங்கீர், அவருக்குப் பின் ஷாஜஹான், பிறகு அவுரங்சீப் என முகலாய பேரரசர்கள் இக்கோட்டையிலிருந்துதான் இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பை ஆண்டுள்ளார்கள். பேரரசர் அக்பர் உறுதியாகக் கட்டிய இக்கோட்டையின் சில பகுதிகளை
இடித்துவிட்டு, பளிங்கு கற்களைக் கொண்டு பேர்ரசர் ஷாஜஹான் கட்டிய கூடங்களும், கோபுரங்களும்தான் இக்கோட்டைக்கு பெருமை சேர்த்தன . இன்றைக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இக்கோட்டைக்கு வருகிறார்கள் என்றால் அந்தப் பெருமையும் பேரரசர் ஷாஜஹானுக்கே உரியது. அதுவரை டெல்லி சுல்தான்களின் தலைநகராக டெல்லி மட்டுமே இருந்த நிலையில் ஆக்ராவை
இரண்டாவது தலைநகராக மாற்றினார் சிக்கந்தர் லோடி. சிக்கந்தர் மறைவிற்குப் பிறகு மகுடம் சூடிய அவருடைய மகனான இப்ராஹிம் லோடி 9 ஆண்டுக்காலம் இக்கோட்டையிலிருந்துதான் ஆட்சி புரிந்துள்ளார் . இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் இக்கோட்டையில் பல கிணறுகள் வெட்டப்பட்டதாகவும், மசூதிகளும், அரண்மணைக் கூடங்களும் கட்டப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது . 

1526ஆம் ஆண்டு நடந்த முதலாம் பானிபட்டுப் போரில் இப்ராஹிம் லோடியை முகலாய பேரரசர் பாபர் தோற்கடிக்க, ஆக்ரா கோட்டை முகலாயர் வசமானது. ஆக்ரா கோட்டையில் இப்ராஹிம் லோடி சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் – அதில் ஒன்றுதான் இன்றளவும் பேசப்படும் கோஹினூர் வைரம் – முகலாய பேரரசு வளமாக, பலமாக காலூன்ற உதவியது . 

பாபருக்குப் பின் ஹூமாயூன் இக்கோட்டையில்தான்(1530) முடி சூட்டப்பட்டார். பெலிகிராம் போரில் ஹூமாயூனைத் தோற்கடித்த ஆஃப்கானிய அரசர் ஷேர்ஷா கைவசமானது இக்கோட்டை . 1556இல் நடந்த இரண்டாவது பானிபட்டுப் போரில் வெற்றிபெற்று மீண்டும் முகலாய பேரரசு காலூன்றியது. ஹூமாயூனுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பேற்ற பேரரசர் அக்பர், தனது தலைநகரை டெல்லியிலிருந்து நிரந்தரமாக
ஆக்ராவிற்கு மாற்றினார் . இன்றைக்கு நாம் காணும் ஆக்ரா கோட்டை அக்பரால் கட்டப்பட்டதுதான். அதுவரை மண் கோட்டையாக இருந்த இக்கோட்டையை, சாண்ட்ஸ்டோன் என்றழைக்கப்படும் சிகப்பு பாறைக் கற்களைக் கொண்டு 8 ஆண்டுக் காலத்தில் (1573) கட்டி முடித்தார் அக்பர். இந்தக் கட்டுமானப் பணியில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. யமுனை நதிக்கரையில்,
உயர்ந்த மதில் சுவர்களுடன் பலமாக கட்டப்பட்ட இக்கோட்டைக்குள் அக்பரின் தலைநகரமே இயங்கி வந்துள்ளது. அக்பருக்குப் பின் ஜெஹாங்கீர், அவருக்குப் பின் ஷாஜஹான், பிறகு அவுரங்சீப் என முகலாய பேரரசர்கள் இக்கோட்டையிலிருந்துதான் இந்தியாவின் பெரும்பகுதி நிலப்பரப்பை ஆண்டுள்ளார்கள்.

Thank You : www.eluthu.com

பதிப்புரை N.K.M.புரோஜ்கான் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval