இப்படி,நம்மாள் இயன்ற அளவு - இனிய மார்க்கம் எடுத்து சொல்லி,அமைதி வழி புரட்சி ஏற்பட அடிகோலவேண்டும்.உலகெங்கும்,எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்கள் திட்டமிட்டு நடைபெறுகின்றனவோ, அங்கெல்லாம் இஸ்லாம் புத்துயிர் பெற்று வந்துள்ளது என்பதை நம் வரலாறு சொல்லும் செய்தி.எனவே,தோல்விக்குப் பின் வெற்றியும், அடக்கு முறைகளுக்குப் பின் ஆட்சிகளும் முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ளன. இதுதான் பிறவ்ன், நம்ரூத் முதற்கொண்டு,அபூ லஹப்,அபூ ஜஹல் வரையும் சேங்கிஸ்கான் முதற்கொண்டு இன்றைய நவீன உலகின் பூச்சாண்டிகள் வரை பார்த்து வந்து கொண்டு இருக்கிறோம்.அந்த அந்த கால கட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் விவரிக்க இயலா துயரங்கள் பட்டும் அவர்களை துடைத்தெறிய இயலவில்லை.இஸ்லாம் மேலோங்கியே வந்துள்ளது,கியாம நாள் வரை மேலோங்கியே இருக்கும்.
42:42. ஆனால் எவர்கள் மக்களுக்கு அநியாயம் செய்து நீதமின்றி பூமியில் அட்டூழியம் செய்கிறார்களோ, அவர்கள் மீது தான் (குற்றம் சுமத்த) வழியிருக்கிறது - இத்தகையோருக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.
53:52. இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுவுடைய சமூகத்தாரையும் (அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக அவர்கள் பெரும் அநியாயக் காரர்களாகவும், அட்டூழியம் செய்தவர்களாகவும் இருந்தனர்.
6620. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
அகழ்ப்போரின்போது நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்று கொண்டிருப்பதை கண்டேன். அப்போது அவர்கள் (இவ்வாறு பாடிய வண்ணம்) கூறிக் கொண்டிருந்தார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம். நோன்பு நோற்றிருக்கமாட்டோம். தொழுதிருக்கவுமாட்டோம்.
நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இணைவைப்போர் எங்களின் மீது அட்டூழியம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தரமாட்டோம்.30
ஆகவே,முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையோரை கருவருக்கலாம் என அவர்கள் கனா கண்டால்,அது இன்ஷா அல்லாஹ் பலிக்காது என்பது மட்டுமல்ல அது ஒரு பெரிய அழிவையே அவர்களுக்கு தேடித் தரும்,இதுவே வரலாறு சொல்லும் பாடமாகும்.
இந்திய மக்கள் இன்று தந்துள்ள இத் தீர்ப்பைக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் அமரவுள்ள நரேந்திர மோடி அவர்களே,உங்களுக்கு ஏக இறைவன் இப் பொறுப்பை தந்துள்ளான்.அந்தப் பொறுப்பை நீங்கள் சரியாக நிறைவேற்ற வேண்டும்.இக்கணம் முதல் முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள் உட்பட அனைவருக்கும் நீங்கள்தான் பிரதமர் என்பதை மறந்து விட வேண்டாம்.
எனவே, இந்துக்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்து கொடுங்கள்.மனு தர்மப்படிதான் அவர்களுக்கு எல்லா சகல வித சடங்குகள்,செயல்கள் செய்ய வேண்டுமா? கல்யாணமா,மரணமா,இப்படி என்னவெல்லாம் உண்டோ அதை தாராளமாக செய்யுங்கள்.அவர்களுடன் எங்களையும், கிறிஸ்தவர்களையும், புத்த,ஜைன,சீக்கிய மக்களையும் இப்படிதான் செய்ய வேண்டும் என கட்டாயப் படுத்தாதீர்கள்.
முஸ்லிம்களுக்கென்று குரானும்,நபிகள் நாயகம் ஸல் அவர்களின் போதனைகளும் இருக்கின்றன.அந்த இரண்டின் படிதான் ஒரு முஸ்லிம் வாழ வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளோம்.எனவே,அந்த முறையில் வாழ எங்களுக்கு எல்லாவித சகல சவுகரியங்களும் செய்ய வேண்டியது இந்தியப் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் உங்கள் கடமையாகும்.அனைத்து தரப்பு மக்களும் - இந்திய மக்கள் என்ற உணர்வுடன் வாழ இது மிக அவசியமாகும்.
அதை எல்லாம் விட்டுவிட்டு,நீங்கள் பாபர் பள்ளிவாசல் இடத்தில் ராமர் கோயில் கட்டினாலோ,எல்லாருக்கும் பொதுவான முறையில் Civil Code கொண்டு வந்தாலோ,முஸ்லிம்கள் உட்பட்ட ஏனைய சிறுபானமை மத மக்களின் உரிமைகளை பறித்தாலோ,முதலில் நீங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஆட்சி செய்ய தகுதியற்றவர் ஆகிவிடுவீர்கள். ஏனெனில் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு Secular State என்று உருவாக்கப்பட்டதாகும். இரண்டாவது,இறைவன் உங்களுக்கு இந்த ஆட்சியை வழங்கியுள்ளதன் நோக்கம் எல்லா மக்களுக்கும் சரி சமமாக நடக்க வேண்டும் என்றுதான்,அதை மீறிய குற்றத்திற்கு உள்ளாவீர்கள். மூன்றாவது,யாரும் தொடர்ச்சியாக அநியாயம் செய்து கொண்டிருந்ததாக சரித்திரம் கிடையாது. அப்படி இருந்தவர்கள் இறுதியில் பெரும் தோல்வியையும் ,அவமானத்தையும் தான் கண்டார்கள்.கடைசியாக,வேறு வழியே இல்லை என்றால்,முஸ்லிம்கள் தங்களுக்கென கபுரை தோண்டிவிட்டு,கபன் உடை தரித்து,தயாராகவே இருப்பார்கள்,இன்ஷா அல்லாஹ்...
2:153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
A.R. அப்துல் லத்திப்
california U.S.A.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval