உடும்புப் பிடின்னு கேள்விப் பட்டிருப்பீர்கள். விடாது இறுக்கப் பிடித்துக் கொள்வதற்கு உடும்புப் பிடி என்று சொல்வதுண்டு. அப்படி என்ன விசேஷம் அந்த உடும்புப் பிடியில்? கள்ளர்கள் உடும்பை உபயோகித்து உயரமான இடங்களுக்கு ஏறிச் செல்வதுண்டு. இராஜகுமாரர்களும் காதலியைத் தேடிச் செல்வதுண்டு.
உடும்பு (Monitor lizard) ஊர்வனவான பல்லி, ஒணான், முதலை இனத்தைச் சேர்ந்தது. உடும்புகளில் சுமார் நூறு வகையான உடும்புகள் உள்ளன. சுமார் 8 அங்குல நீளமுள்ள உடும்பில் இருந்து பத்தடி வரை நீளமுள்ள உடும்பு இனங்கள் உள்ளன.
உடும்பு ஓணான், பல்லி இவற்றின் இனத்தைச் சேர்ந்தாலும் இவற்றின் இல்வாழ்க்கை அவற்றைப் போல பலாத்கார வாழ்க்கை அல்ல. இன்பக் காதல் வாழ்க்கை.
ஆண் உடும்பு பெண் உடும்பின் கூடவே சென்றிடும். பெண் உடும்பு சற்று ஓய்வெடுத்தால் ஆண் உடும்பு பெண் உடும்பின் உடலருகேயே தானும் படுத்துக் கொண்டு தலையோடு தலை வைத்துக் கொள்ளும். அவ்வப்போது நாவினால் பெண்ணின் கழுத்தையும் தலையையும் நக்கிக் கொடுக்கும்.
மனையாள் இசைந்த பின் இணையும். பின் சில நாட்களுள், பெண் உடும்பு இரண்டு மூன்றடி ஆழமுள்ள ஒரு குழி தோண்டி அதனுள் சுமார் இருபத்தி ஆறு முட்டைகள் வரை இட்டு. குழியை மண்ணால் மூடி விடும். முட்டைகளில் உள்ள கரு முதிர்ந்து குட்டியான உடன் அவை மண்ணைத் தள்ளிக் கொண்டு வெளியேறிடும்.
உடும்புகளை வீட்டில் வளர்ப்பவர்களும் உண்டு. உடும்புகளின் உணவு பூச்சிகள், புழுக்கள், பறவைகள் மற்றும் சிறிய மிருகங்கள். உடும்பு மாமிசம் உண்டால் ஆணின் வீரியம் அதிகரிக்கும் என்பது தென் இந்தியா மற்றும் மலேசியாவில் பரவலாக நம்பப் படும் ஒன்று.
‘உடும்புத் தைலம்’ மூட்டு வலிக்கு மருந்து’ என்று சொல்வோரும் உண்டு. சிற்றூர் சந்தைகளில் சில ஆதி வாசிகள், நரிக் குறவர்கள் கடை பரப்பி உடும்பு உப்புக் கண்டம், உடும்புத் தைலம் விற்பதுண்டு.
ஆதாரம்: நடராஜன், கல்பட்டு
பதிப்புரை ;N.K.M.புரோஜ்கான்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval