சவூதி அரேபியாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது பள்ளிவாசல் ஒன்றிற்கு தற்கொலைபடை தீவிரவாதி ஒருவன் தன்னுடைய உடலில் குண்டை கட்டிக்கொண்டு வரும்போது இரு நண்பர்களான முஹம்மது ஹசன் அலி, அப்துல் ஜலீல் அல் அர்பாஷ் ஆகியோர் தீவிரவாதியை அடையாளம் கண்டு தீவிரவாதி பள்ளிவாசலின் உள்ளே நுழைய முடியாதவாறு தடுத்து நிறுத்தினர்.
அப்போது பள்ளிவாசல் வளாகத்திலேயே வெடித்த குண்டுவெடிப்பில் இரு நண்பர்கள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர்.
கடும் சட்டதிட்டங்கள் கொண்ட சவூதி அரேபியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு உலக முஸ்லிம்களிடத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குண்டுவெடிப்பில் தீவிரவாதி பலியானாலும் தீவிரவாதியின் பின்னணியில் இருப்பவர்களை பற்றிய ஆய்வுகளிலும், அதிரடி வேட்டையிலும் சவூதி அரேபிய காவல்துறையினரும், உளவுத்துறையினரும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தீவிரவாதிகளை பற்றிய சிறிய துப்பு கிடைத்தததை அடுத்து தீவிரவாதிகளின் கூடாரத்தை சுற்றி வளைத்தது சவூதி காவல்துறை....
துப்பு கொடுத்தவரை பற்றிய முழு தகவல்களையும் சவூதி அரேபிய அரசு வெளியிடவில்லை,
அதேவேளையில் துப்பு கொடுத்தவருக்கு 50 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் ரூ 8 கோடிக்கும் மேல்) பரிசு வழங்கியுள்ளது.
மேலும் இதுப்போன்ற தீவிரவாதிகளை அடையாளம் காட்டினால் 70 லட்சம் ரியால் பரிசு வழங்குவதாக சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
தீவிரவாதிகள் 16 பேரின் மரண தண்டனையை விரைவில் எதிர்பார்க்கலாம். மரண தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் தலையை வெட்டி அரசு நிறைவேற்றும்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval