ஹரியானா மாநிலத்தில் உணவக உரிமையாளர் ஒருவர் ஆப்பிள் ஐபோன் 6 ல் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த போன் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
குர்கானை சேர்ந்த உணவக உரிமையாளர் கிஷன் என்பர் தனது காரில் அமர்ந்து ஐபோனில் 6 பேசியவாறு சென்றுள்ளார். அப்போது திடீரென போனில் இருந்து தீப்பொறி வெளிப்பட்டுள்ளது. உடனே போனை வெளியில் எறிந்துள்ளார். அடுத்த சில வினாடிகளிலேயே அந்த போன் வெடித்து சிதறியுள்ளது.
மேலும் கிஷனின் கட்டை விரலில் தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பெயர் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் ஐபோன் 6 வெடித்து சிதறுவது இதுவே முதல் முறை. இந்த சம்பவம் தொடர்பாக ஆப்பிள் நிறுவனமும் விசாரனை மேற்கொண்டு வருகிறது.
உலக அளவில் பிரபலமான ஆப்பிள் செல்போன் நிறுவனம், மிக உயர்ந்த விலையில் செல்போன்களை விற்பனை செய்துவருகிறது.வெடித்த ஐ போன் 6, இந்தியாவில் சுமார் 52 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval