பிரபல ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், இந்த ஆண்டு முதல் விண்டோஸ் OS கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகப்படுத்தப்போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பானது, சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்ஃபோன்களில் விண்டோஸ் இயங்கு தளத்தினை சோதனை செய்ய ஆரம்பித்துள்ளதை உறுதி செய்துள்ளது.
ஏற்கனவே, சாம்சங் நிறுவனம் தனது கூகுள் ஆண்ட்ராய்டு மென்பொருளுக்கான ஒப்பந்தத்தை சிறிது காலத்திற்கு முறித்துக் கொள்ளவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானது.
இதற்கு முன்பே சாம்சங்கில் விண்டோஸ் ஃபோன் இருந்தாலும் கூட, அதிகளவு இல்லை. மேலும் மைக்ரோசாஃப்ட் கடந்த ஆகஸ்டு மாதம், சாம்சங் தனது விண்டோஸுக்கான காப்புரிமையை சரியான நேரத்தில் புதுப்பிக்கவில்லை என்று வழக்கு போட்டிருந்தது என்பது குறிப்பித்தக்கது.
தற்போது, இரு நிறுவனங்களும் தங்கள் பிரச்சனைகளை சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்ள முன் வந்துள்ளதாகவும், விரைவில் சாம்சங் நிறுவனத்தின் புதிய விண்டோஸ் ஸ்மார்ட்ஃபோன் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.
ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சாம்சங்கின் விண்டோஸ் ஸ்மார்ட்ஃபோன்களை எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval