உலகின் முதல் மிதக்கும் தீவுகள் துபாயில் அமையவுள்ளது. இதனை ஒஜ்யானா மற்றும் அமில்லாராஹ் பிரைவேட் ஐலண்ட் ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து 33 ஆடம்பர தீவுகளை உருவாக்க உள்ளனர். துபாய் நிறுவனமான நகீல் தற்பொழுது இந்த புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இந்த இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. இந்த 33 ஆடம்பர தீவுகளும் தனித்தனியே நீச்சல் குளம், அழகிய தோட்டம், என பல சிறப்பம்சம் கொண்டதாகும்.
இது தொடர்பாக இதை உருவாக்க இருக்கும் நிறுவனங்கள் கூறுகையில் ”இந்த உலகத்தின் முதல் மிதக்கும் தீவுகளில் 33 தீவுகள் அமையவுள்ளன, இந்த தீவுகள் முழுக்க முழுக்க இதனை வாங்குபவர்களின் தேவைக்கேற்ப வடிவமைக்கபட உள்ளன எனவும், இன்னும் அனைத்து முக்கிய ஆவணங்களும் ஒப்புதல் பெறும் வரை தாங்கள் எந்தவிதமான விற்பனையையும் தொடங்கப்போவதில்லை எனவும் அமில்லாராஹ் பிரைவேட் ஐலண்ட் நிதின் முதன்மை செயல் அதிகாரி பால் வேன் டி கேம்ப் தெரிவித்தார்.
இந்த உலகின் முதல் மிதக்கும் தீவுகள் முழுக்க முழுக்க உலகத்தரம் வாய்ந்த கட்டிடக்கலை வல்லுனர்களால் கட்டப்பட உள்ளதாகவும். இந்த மிதக்கும் தீவுகள் ஒரே இடத்தில் ஆடாமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீவுகளின் அடிப்பாகம் நூறு வருடங்கள் ஆனாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில் உருவாக்கபட உள்ளன எனவும் இதனால் கடலுக்கு அடியில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு புதிய வாழ்விடம் அமையும் எனவும், இதே போன்ற மிதக்கும் தீவுகளை தங்கள் மாலத்தீவிலும், மியாமி தீவுகளிலும் உருவாக்க உள்ளதாகவும் இந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval