Sunday, June 7, 2015

இன்றைய இளைஞர்களுக்கு தேவையான Hi-Tech Devices என்னென்ன?

High-Tech-Devices copy
இது தொழில்நுட்ப காலம். தொழில்நுட்பம் இல்லையெனில் நமது அன்றாட செயல்களைக் கூட செய்ய இயலாது என்ற அளவுக்கு ஆகிவிட்டது என்பதை விட தொழில்நுட்பம் ஆக்கிரமித்து விட்டது என்றே கூறலாம். அதுவும் இளைஞர்கள்??? கேட்கவே வேண்டாம்.
தொழில்நுட்ப சந்தையில் அறிமுகமாகும் அதி நவீன சாதனங்களை வாங்கி விட்டுதான் அடுத்த வேலை பார்ப்பார்கள். அந்த வகையில் இன்றைய இளைஞர்கள் பயன்படுத்தும் அதி நவீன சாதனங்கள் என்னென்ன தெரியுமா??
ஸ்மார்ட்ஃபோன்:
இப்போதெல்லாம் பள்ளி செல்லும் குழந்தைங்களிடமே விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் வந்து விட்டது, இளைஞர்களைக் கேட்கவா வேண்டும். ஸ்மார்ட்ஃபோன் இல்லாத இளைஞர்களைக் காண்பதே அரிது.
ஹெட்போன்கள்:
இசை கேட்பது பலருக்கும் நல்ல அனுபமாக இருக்கின்றது. சிலர் ப்ளூடூத் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் வாகனங்களை இயக்கும் போதும் ஃபோன்களில் அழைப்புகளை மேற்கொள்ள முடிகின்றது.
லேப்டாப்:
என்னதான் வீட்டில் கணினி இருந்தாலும் வெளியோ போகும் போது அதை எடுத்து செல்ல முடியாது அதனால் தான் இன்றைய இளைஞர்களின் அத்யாவசிய தேவையாக உள்ளது லேப்டாப்.
டேட்டா கார்டு:
கணினி மற்றும் லேப்டாப்களில் இன்டெர்நெட் பயன்படுத்த நிச்சயம் டேட்டா கார்டு தேவைப்படும். தற்போது வரும் சில டேட்டா கார்டுகளில் WiFi வசதியும் உள்ளது.
ஐ பாட்: பாட்டு கேட்பது மனதை மென்மையாக்கும், கையில் மியுசிக் ப்ளேயர்(ஐ பாட்) இருப்பது நினைத்த நேரத்தில் பாட்டு கேட்க முடியும் என்பதால் இதனை விரும்பி வாங்குகின்றனர்.
கேமரா:
கேமரா இல்லாமல் யாருமே இல்லை எனலாம் அந்த அளவு எங்கு போனாலும் போட்டோ எடுத்து போட்டோக்களின் மூலம் நியாபகங்களை அழியாமல் பார்த்து கொள்ளலாம். மேலும் போட்டோ கிராஃபி பைத்தியமாக இருக்கின்றனர்.
கேமிங் கண்ட்ரோலர்:
வீடியோ கேம் விளையாடுவதில் அலாதி ப்ரியம் இருக்கும் அனைவருக்கும். அதுவும் இந்த காலத்து இளைஞர்கள் நிச்சயம் ஏதேனும் கேம் விளையாடாமல் இருப்பதில்லை என்று தான் கூற வேண்டும்.
போர்டபிள் டிரைவ்:
தற்சமயம் டேட்டாக்களை பாதுகாப்பது பெரிய விஷயமாக உளளது, அவ்வப்போது அவைகளை பாதுகாப்பாக எடுத்து வைக்க போர்டபிள் டிரைவ்கள் உதவியாக இருக்கின்றது.
ஸ்மார்ட் வாட்ச்:
யாரும் வாட்ச்களை டைம் மட்டும் பார்க்க பயன்படுத்துவதில்லை, அதனால் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பல உபயோகமான விஷயங்களுக்காக பயன்படுத்தி கொள்கின்றனர்.
ஈ-புக் ரீடர்:
இதன் மூலம் புத்தகங்களை வாசிக்க முடியும். பை நிறைய புத்தகங்களை சுமப்பதை விட டிஜிட்டல் முறையில் புத்தகங்களை வாசிக்கலாம். WiFi இன்டெர்நெட் மூலம் புத்தகங்களை வாங்கும் வசதியும் இதில் உள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval