டெல்லியில் ஊழலில் சிக்கிய 8 போலீசார் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். 69 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பதவியேற்ற பிறகு அங்கு ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியை உலகின் ஊழல் இல்லாத நகரமாக மாற்றுவேன் என்று கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதற்காக மக்களுக்கு அவசர இலவச தொலைபேசி புகார் எண்களையும் டெல்லி அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் ஸ்டிங் ஆபரேஷன், வாட்ஸ் அப், செல்போன் கேமரா உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக அரசு ஊழியர்கள், போலீசார் உள்ளிட்டோரின் லஞ்ச லாவண்யங்களை படம் பிடித்து அரசுக்கு அனுப்பினால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஊழல் தடுப்பு பிரிவுக்கு கூடுதல் வாகனங்கள், கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் செய்து தர ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கடும் நெருக்கடியையும் ஆம் ஆத்மி சந்தித்து வருகிறது. கடந்த 10 மாதத்தில் மட்டும் டெல்லியில் ஊழலில் சிக்கிய 8 போலீசார் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். 69 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த காலத்தில் 74போலீசார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 36 பிரிவுகளின் கீழ் டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் 2 இன்ஸ்பெக்டர்கள், 6 எஸ்ஐக்கள், 6 உதவி எஸ்ஐக்கள், 22 ஏட்டுகள், 38 கான்ஸ்டபிள்கள் ஆகியோர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. மேலும் ஜூன் 31ம் தேதி வரை காவல் நிலையத்தில் பணியாற்றிய 5 எஸ்ஐக்கள் உள்பட 10 போலீசார் மீது லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 4ம் ேததி கவர்னர் நஜீப் ஜங்குடன் நடந்த கூட்டத்தின் போது கடந்த ஓராண்டில் காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை குறித்து விளக்கி கூறினோம் என்றார் ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு கமிஷனர் தீபக் மிஸ்ரா. காவல்துறையில் ஊழலை ஒழிக்க உரிய ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அப்போது கவர்னர் உறுதி அளித்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval