Tuesday, June 23, 2015

நோன்பு சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை குறைக்கிறது


நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் நடைமுறை படுத்தும் உணவு அமைப்பை பற்றி ஆய்வு செய்த அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவை சார்ந்த ஆய்வாளர்கள் நோன்பிர்காக முஸ்லிம்களிடம் பின்பற்ற படும் உணவு நடைமுறையில் பல பயன்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்


ஆம் நோன்பு காலத்தில் இப்தார் என்றும் சஹர் என்றும் இரு நேர உணவுகளை முஸ்லிம்கள் உண்ணுகின்றனர்

இந்த உணவு முறை முதுமையை தாமத படுத்துவதாகவும் நீரழிவு நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை குறைப்பதாகவும் தெர்கு கலிபோர்னியாவை சார்ந்த ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர்

மூன்று மாதங்களாக தொடர்ந்து அவர்கள் மேர் கொண்ட ஆய்வில் ஆய்வுக்கு பயன் படுத்த பட்டவர்களை இரு குழுக்களாக பிரித்தனர்

ஒரு குழுவினரை சாதரண உணவு முறையிலும் மற்றொரு குழுவினரை நோண்பின் போது பின்பற்ற படும் உணவு அமைப்பிலும் பயண்படுத்தினர்

பிறகு இரு சாராரின் இரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்த போது

சாதரண அமைப்பில் உணவு உண்டவரை விட நோன்பின் அமைப்பில் உணவு உண்டவரின் இரத்தத்தில் சர்கரையின் தன்மைகள் குறைந்திருந்ததாகவும் முதுமையை தள்ளிபோடும் தன்மைகள் இருந்தாதகவும் புற்று நோய் அபாயத்தை குறைக்கும் தன்மைகள் இருந்ததாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval