சென்னை முகபேர் பிரபல இருதய பிராண்டியர் லைஃப்லைன் ஆஸ்பத்திரியில் நடந்த தவரான சிகிச்சையால் என் அன்பு மகளை இழந்தேன்.
எனது மகள் M.R.டயானா வயது 25 M.C.A படித்துள்ளார். நல்ல உடல் நலத்துடன் இருந்த அவருக்கு சிறுவயதில் உள்ள இருதய நோய்க்கான இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை முகபேர் பிராண்டியர் லைஃப்லைன் மருத்துவமனையில் கடந்த மே மாதம் 27-ம் தியதி சேர்த்தோம். 95% அறுவை சிகிச்சை வெற்றிபெறும் என்றார்கள்.முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பணத்தை கட்டினோம்.28-ம் தியதி காலை 10 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியது. இரவு வரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.நடு இரவு 3 மணிக்கு ICUவில் வைத்து காண்பித்தார்கள்.
எந்த அசைவும் இல்லை.பின்பு மறுநாள் காலையில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்துள்ளார்கள். எங்களுக்கு தெரிவிக்கபடவில்லை. 29-ம் தியதி இரவு 10.15 மணிக்கு இறந்து விட்டதாக தெரிவித்தார்கள். இரண்டு நாட்களாக ஆபரேசன் தியேட்டரிலும், ICUவிலும் மாற்றி மாற்றி கொண்டுபோய் எங்களுக்கு மிகுந்த மன் உளைச்சலை தந்துள்ளார்கள். டாக்டர் செரியன், டாக்டர் ஆன்றோ, டாக்டர் செளமியா குழுவினர் தவறான அறுவை சிகிச்சை செய்து என் மகள் மரணம் அடைய காரணமாக இருந்துள்ளனர். தாங்கள் தயவு கூர்ந்து என் அன்பு மகளை தவறான சிகிச்சை முறையில் மரணமடைய செய்த இந்த டாக்டர்கள் குழுவினர் மீதும் ஆஸ்பத்திரி மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து மேலும் எந்த பெற்றோர்களுக்கும் இவ்விதமான உயிர்சேதமும் பண செலவுகளும் ஏற்படாத வண்ணம் காத்திடுமாறு. தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வருக்கும், சென்னை போலீஸ் கமிஷ்னர்க்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
பிரபல ஊடகங்கள் இந்த செய்தியை வாங்க மறுத்ததால் பட்டதாரி பெண்னின் தந்தை இன்று ஒரு தகவல் முகநூல் பக்கத்திற்கு செய்தியை அனுப்பிவைத்துள்ளார். இந்த தகவலை இன்று ஒரு தகவல் குழு தீர விசாரித்து மரணம் அடைந்த பெண்ணுக்காக குரல் கொடுக்கிறது.இது போன்ற சம்பவம் இனிமேல் நடக்காமல் தடுக்க அணைத்து மக்களும் குரல் கொடுக்க வேண்டும்.
பிரபல நடிகர் நடிகைகளை விமர்சனம் செய்யும் ஊடகங்கள் ஏன் இவ் விதமான செய்திகளை மக்களுக்கு தெரிவிக்க மறுக்கிறது?
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval