முன்பொருகாலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் எவ்விதபாகுபாடுமின்றி ஊர் நலனுக்காக எத்தனையோ பொதுச் சேவைகள் செய்து இருக்கிறார்கள் எவ்வளவோ நல்ல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அக்கரைகாட்டி நமது ஊருக்காக நல்லபல பயனுள்ளவைகளைச் செய்து இருக்கிறார்கள்.அதையொட்டி சுற்றுவட்டார கிராம மக்களும் பயனடைந்து இருக்கிறார்கள்
ஆனால் இந்தகாலகட்டத்தில் உள்ளதுபோல அன்று இத்தனை அமைப்புகள் உட்பிரிவுகள் ஈகோ ஏதும் இல்லாமல் நமது சமுதாயம் நமது மக்கள் என்ற பார்வையும் சுயநலமில்லாத நல்ல நோக்கம் மட்டும்தான் இருந்தது. பொதுமக்களுக்கும் ஊரின்மீது அக்கரையும் இருந்தது.
ஆனால் அன்றிருந்தவைகளெல்லாம் இன்று எங்கோ சென்று ஓடிமறைந்து விட்டது. ஒற்றுமையாய் வாழ்வது என்பதெல்லாம் எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கிறது. நாளடைவில் ஒருத்தருக்கொருத்தர் புரிந்துணர்வு இல்லாமல் நம்மனதில் விஷச் செடிகள் வளர்ந்து நம்மை பிரித்துக் கொண்டிருக்கிறது என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று சொல்வதுபோல மனம் வைத்து நாம் ஊர் நலன்கருதி ஊருக்கு ஒரு பிரச்சனையென்றால் அனைவரும் பாகுபாடின்றி கைகோர்த்து ஓரணியாய் நிற்ப்பதுதான் பலம் சேர்ப்பதாக இருக்கும். இப்படி பல பிரிவினைகள் நமக்குள் பல்கிப் பெருத்ததுதான் மிச்சம். அன்று எந்த அமைப்பும் இல்லாமல் செய்த நற்காரியங்களை ஊர் நலன்களை இப்போது இத்தனை அமைப்புக்கள் வந்தும் ஒன்றும் ஊருக்கு உருப்படியாய் செய்தபாடில்லை. செய்யவும் நாதியில்லாமல் போவிட்டது என்பதுதான் உண்மை. அப்படியே யாராவது எதையாவது செய்ய முன்வந்தாலும் அதில் குறைகாண்பதில் தான் கவனம் செலுத்துகிறார்கள்.இந்தப்போக்கு முதலில் அனைவர்களின் மனதிலிருந்து மாறவேண்டும்.
அதுமட்டுமல்ல. அனைவரிடத்திலும்.காசுபணம் பெருகப் பெருக அத்தோடு பல உட்பிரிவுகளும் பல அமைப்புக்களும் உருவாகி இறுதியில் நமக்குள் நீயா நானா ? நீபெரியவனா ? நான் பெரியவனா ? என்கிற போட்டி வந்து தலைவிரித்தாட ஆரம்பித்து விட்டதுதான் இன்றைய நிலையில் உச்சகட்ட நிலையாக இருக்கிறது. இந்த நிலையைப் போக்குவதற்கு நாம் அனைவரும் மனத்தால் ஒன்றுபடவேண்டும். மனத்தால் ஒன்றுபடுவதாக இருந்தால் முதலில் நமக்குள் சில திருத்தங்களை செய்துகொள்ளவேண்டும்.
1,நமதூர் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் முதலில் நமக்குள் நீயா நானா ? என்கிற நிலை மாறவேண்டும்.
2, ஊர் நலனில் பொதுச் சேவைகளில் பாகுபாடின்றி எல்லோரிடத்திலும் அக்கரை இருக்கவேண்டும்.
3,யார் எந்தக் கட்சி எந்த அமைப்பை சார்ந்து இருந்தாலும் ஊருக்கு ஏதாவது ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் அனைவரும் ஓர் அணியில் கைகோர்த்து நிற்க்க வேண்டும்.
4,ஒவ்வொரு முஹல்லா வாசிகளும் அவரவர் தலைமையை மதித்து அவர்கள் சொல்லும் ஆலோசனைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
5,தனிப்பட்ட எந்த ஒரு சொந்தப் பிரச்சனையையும் அரசியலாக்கி தெருப் பிரச்சனை ஊர்ப்பிரச்சனை என்று ஆக்கி விடக்கூடாது.
6,தெருவாரியாக வேற்றுமை பார்ப்பதை மனதிலிருந்து அடியோடு அறுத்து வீச வேண்டும்.
7,ஜாதிமத பேதமில்லாமல் அக்கம்பக்கத்து கிராம மக்களையும் அரவணைத்து அவர்களுக்கும் நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும்..
இப்படி நாம் அனைத்து விஷயங்களிலும் பேணி நடந்து வந்தொமேயானால் நம்ம அதிராம் பட்டினம் இந்த தஞ்சை ஜில்லாவிலேயே தலை சிறந்த பூமியாக அனைத்து வசதிகளுக்கும் பஞ்சமில்லாத ஊராகா அமைதிப் பூங்காவாக திகழும் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை.
வறுமையில் நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த ஒற்றுமை இப்போது ஓரளவு வசதிவாய்ப்பை பெற்றதும் நமக்குள்ளான ஒற்றுமை தூர விலகிச் சென்று கொண்டிருக்கிறது.இதற்க்குக் காரணம் ஈகோ எனும் காழ்ப்புணர்ச்சியே காரணமாக இருக்கிறது. அடுத்து சுயநலம் தலைதூக்கி விட்டது. இவைகள் அனைத்தையும் ஒவ்வொருவரது மனதிலிருந்து களைந்து விட்டால்தான் நாம் ஒன்றுபட்டு வாழமுடியும்.! ஒன்றுபடுவார்களா சமுதாய மக்கள்.!?!?
ஆக்கம்: அதிரை மெய்சா
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval