Sunday, June 21, 2015

டாக்டர் அஹ்மத்


டாக்டர் அஹ்மத் ஒரு
More similar stock images of ` Doctor with child patient in UK `பிரபலமான மருத்துவர்.
அவர் ஒரு தடவை ஒரு
முக்கியமான மருத்துவ
மாநாட்டிற்குப்
புறப்பட்டார். அது
இன்னொரு நகரத்தில்
நடக்கவிருந்தது.
மருத்துவ ஆய்விற்கான
விருது அதில்
அவரிற்கு
வழங்கப்படவிருந்தது.
அவர் மிக நீண்ட காலமாக
செய்த உழைப்பின்,
அராய்ச்சியின் பயனாக
அந்த விருது அவரிற்கு
வழங்கப்படவிருந்தது.
அதனால் அவர் மிகவும்
ஆர்வமாக அதனை பெற
புறப்பட்டிருந்தார்.
விமானம் அவரையும்
சுமந்தவாறு
புறப்பட்டது. இரு மணி
நேரம் பறந்த விமானம்
திடீரென அருகில்
இருந்த விமான
நிலையத்தில்
தரையிறக்கப்ட்டது.
விமானத்தில் ஏற்பட்ட
கோளாறே
தரையிறக்கத்திற்கான
காரணம். அடுத்த 10 மணி
நேரத்திர்க்கு
விமானவேயில்லை
என்ற நிலை. டாக்டர்
அஹ்மத்தை பதற்றம்
பற்றிக்கொண்டது.
உரிய நேரத்தில்
மாநாட்டை
சென்றடைவோமா
எனும் கவலையே அது.
ஒரு வாடகை காரை
எடுத்து கொண்டு,
ஊரவர்களிடம்
விசாரித்து குறுக்கு
பாதையில் வேகமாக
பயணித்தார் டாக்டர்.
இப்போது மீண்டும்
அதிர்ச்சி. கடும் மழை.
காற்று. கிட்டதட்ட ஒரு
புயலையொத்த நிலை.
டாக்டரின் ஆர்வம் அவரை
அதனை
பொருட்படுத்தாமல்
பயணிக்க ஆரம்பித்தார்.
வர வர நிலை மோசமாக
மாறியது.
வாகனத்தை
செலுத்துவதே பெரிய
போராட்டமாக
மாறிவிட்டது. 2 மணி
நேர கடினப்
பயணத்திற்கும் பின்னர்,
தான் வழி தவறி
விட்டது அவருக்கு
உறுதியானது.
பாலைவனச்
சாலையில், பயங்கர
புயல்
காற்றுக்கிடையே
நீண்ட பயணமிது.
அயர்வு, களைப்பு,
தாகம், பசி என சோர்ந்து
போனார் டாக்டர்.
சிறிது தூரத்தில் ஒரு
வீடு தெரிந்தது. காரை
நிறுத்தி அதன் கதவை
தட்டினார்.
ஒரு வயதான பெண்
கதவை திறந்தார்.
பெண்ணிடம் தான்
சிறிது இங்கு தங்கி
செல்லலாமா என்றார்
டாக்டர். பெண்
யோசித்து பின்னர்
நிலைமைகளை
கருத்தில் கொண்டு சரி
என்றார். டாக்டர் உள்
நுழைந்தார் வீட்டினுள்.
பெண் ஏதாவது
சாப்பிட்டீர்களா என்றார்.
டாக்டர் இல்லை என்றார்.
தனது ரொட்டியை
டாக்டரிற்கு
கொடுத்தார் பெண்.
அவருடன் பேசிய
போதுதான்
தெரிந்தது டாக்டர்
வழிதவறி வந்த விடயம்.
டாக்டரிற்கு இப்போது
பதற்றம் இரட்டிப்பானது.
மெழுகுவர்த்தியின்
மங்கலான
வெளிச்சத்தில் ஒரு
குழந்தை கட்டிலில்
படுத்திருந்தது. பார்த்த
மாத்திரத்திலேயே
அது நோயாளியான
குழந்தை என்பதை
டாக்டர் அறிந்து
கொண்டார்.
தொழுது
கொண்டடிருந்த பெண்,
தொழுகையை
முடித்ததும், அவரிடம்
மெல்ல பேச்சு
கொடுத்தார் அஹ்மட்.
அந்த பெண்ணின்
தொடரான தொழுகை,
பிரார்த்தனை,
இடைக்கிடை விசும்பி
அழுதமை என்பன
அஹ்மட்டின் மனதை
பிசைந்தன.
அப்பெண்ணிடம் கவலை
படாதீர்கள் அல்லாஹ்
உங்கள் பிரச்சனைகளை
இலேசாக்குவான்
என்றார்.
பெண்ணும் “ஆம். நான்
அல்லாஹ்வையை
முற்றிலுமைாக
நம்பியுள்ளேன்”
என்றார். “அந்த
தொட்டிலில் கிடக்கும்
குழந்தை எனது பேரன்.
இதன் பெற்றோர்
அண்மையில் ஒரு
விபத்தில் இறந்து
விட்டனர்.
இந்த குழந்தைக்கு
அரிய வகை
புற்றுநோய் உள்ளது.
நான் போகாத
மருத்துவமனை
இல்லை. பார்க்காத
வைத்தியர்களும்
இல்லை. எல்லோரும்
கையை விரித்து
விட்டார்கள், முடியாது
என்று. என் பேரனின்
பிரச்சனைக்கு
வைத்தியம் செய்ய ஒரே
ஒரு மருத்துவரால்
தான் முடியுமாம்.
அவரது பெயர் டாக்டர்
அஹ்மதாம். ஆனால் அவர்
இருக்குமிடம், நான்
இருக்குமிடத்தில்
இருந்து வெகுவெகு
தூரம். அவரை நான்
காண்பதற்கும் வாய்ப்பே
இல்லை. அவர் அவ்வளவு
பெரிய மருத்தவர்.
ஆதலால் தான் நான்
அல்லாஹ்விம் அல்லும்
பகலும் டாக்டர்
அஹ்மத்தை
சந்திப்பதற்கும், அவர் என்
பேரனிற்கு சிகிச்சை
அளிப்பதற்கும் ஒரு
வாய்ப்பை தருமாறு
மன்றாடிப்
பிரார்த்தனை
செய்கிறேன்” என்றார்
அந்த மூதாட்டி.
இதனைக் கேட்ட டாக்டர்
அஹ்மத் கண்களில்
தாரை தாரையாக
கண்ணீர் வழிந்தது.
சிலிர்த்துப் போனார்.
அவரது
மெய்கூச்செறிந்தது.
“அல்லாஹு அக்பர்” இந்த
வார்த்தைகளை அவர்
உதடுகளும், நாவும்
விடாமல்
முனுமுனுத்தன.
விமானத்தில் ஏற்பட்ட
கோளாறு, அதன்
தரையிறக்கம், பயங்கர
புயல், பாதை வழி
மறியாமை, தீராத
பசியும் தாகம்,
இவையெல்லாம் ஏன்
ஏற்பட்டன என்பது
டாக்டரிற்கு புரிந்து
போனது. அவர்
அடிக்கடி குழம்பும்
கலாகதிரின் ஒரு
சின்ன முடிச்சு
அவிழ்வது டாக்டரிற்கு
புரிந்து போனது.
எல்லாமே புரிந்து
போனது. “நீங்கள் டாக்டர்
அஹ்மதை சந்திப்பதற்கு
அல்லாஹ் வழி
ஏற்படுத்தி தரவில்லை.
மாறாக டாக்டர்
அஹ்மதையே உங்கள்
காலடியில் கொண்டு
வந்து நிறுத்தி
விட்டான்.
நேரடியாகவே. ஆம்
நான் தான் அந்த டாட்டர்
அஹ்மத்” என்றார் நா
தளுதளுக்க. இதனை
கேட்ட அந்த முஸ்லிம்
மூதுாட்டி
திடுக்கிட்டு போனால் .
இப்போது அவர்
உதடுகளும், நாவும்
அதே வார்த்தையை
விடாமல்
முனுமுனுக்கின்றன.
“அல்லாஹு அக்பர்” என.
அவள் முகத்தில்
ஆனந்தம். கண்களில்
துளி துளியாக
கண்ணீர் சுருங்கிய
அவள் முகத் தோளில்
பீலி போல்
வடிந்தோடியது. டாக்டர்
பட்டம், மாநாடு, தேசிய
விருது, விஞ்ஞானம்,
அறிவியில், பணம்,
அதிகாரம், டாக்டர் அஹ்மர்
எனும் புகழ் எல்லாமே
அந்த ஏழை முஸ்லிமின்
பிரார்த்தனையின் முன்
நத்திங் என்பதை
இதயத்தின் ஒவ்வோரு
துடிப்பிலும்
உணர்ந்தார் டாக்டர்
அஹ்மத்.
சுபுஹானல்
லாஹ்.
“(நபியே!) என்
அடியார்கள் என்னைப்
பற்றி உம்மிடம் கேட்டால்,
நிச்சயமாக நான்
சமீபமாகவே
இருக்கிறேன்.
பிரார்த்தனை
செய்பவரின்
பிரார்த்தனைகு அவர்
பிரார்தித்தால்
விடையளிக்கின்றேன்.
அவர்கள் என்னிடமே
(பிரார்தித்து)
கேட்கட்டும். என்னையே
நம்பட்டும். அப்போழுது
அவர்கள் நேர்வழியை
அடைவார்கள் என்று
கூறுவீராக”
அல்-குரான் : 2:186
நன்றி : 💐மறுமை வெற்றி தமிழ் மாத இதழ்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval