புதுடெல்லி,
கருப்பு பண ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை கடந்த நவம்பர் 8–ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக ஒழித்தார். இதனால் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வந்தது. மேலும் ஏ.டி.எம். மையங்களில் ஒரு நாளைக்கு ரூ.2,000 மட்டுமே எடுக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் அது ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் ஜனவரி முதல் தேதி முதல் ஏ.டி.எம்.மில் ஒரு நாளுக்கு ரூ.4,500 எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கிஅறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் தற்போது ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்கும் வரம்பை ரிசர்வ் வங்கி ரூ. 4.500ல் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி உள்ளது.அது போல் நடப்பு கணக்கில் இருந்து ஒரு வாரத்திற்கு ரூ. 50 ஆயிரம் என இருந்தது ரூ. 1 லட்சம் ரூபாயாக அதிகரிக்கபட்டு உள்ளது.இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது.
--தினத்தந்தி

No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval