Monday, January 16, 2017

காரைக்காலில் கடலில் தத்தளித்த 3 மாணவர்களை காப்பாற்றி தீயணைப்பு வீரர் பலி


காரைக்கால்: காரைக்கால் கடலில் தத்தளித்த 3 மாணவர்களை காப்பாற்றிய தீயணைப்புத்துறை வீரர் உயிரிழந்தார். காரைக்கால் பாத்திமா வீதியை சேர்ந்தவர் புகழேந்தி (48). புதுச்சேரி தீயணைப்புத்துறை வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கு கவிதா என்கிற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று காணும் பொங்கலையொட்டி,  புகழேந்தி விடுமுறையில் காரைக்காலுக்கு வந்தார். கடற்கரைக்கு குடும்பத்தோடு சென்றிருந்தார். பகல் 12 மணியளவில் புகழேந்தி  தனது குடும்பத்தினருடன் கடற்கரையில் நடந்து சென்றபோது தாமானாங்குடியை சேர்ந்த 3 மாணவர்கள் போலீசாரின் எச்சரிக்கையை மீறி கடலில் குளித்துக்கொண்டிருந்தனர். 

திடீரென ராட்சத அலை அவர்களை கடலுக்குள் இழுத்து சென்றது. மாணவர்கள் மரண ஓலம் கேட்டு, தீயணைப்புத்துறை வீரர் புகழேந்தி, கடலில் பாய்தார். அலையில் சிக்கிய 3 மாணவர்களையும் மீட்டு கரைக்கு தள்ளிவிட்டார். ஆனால் சுழல் அலையில் சிக்கி புகழேந்தி தனது குடும்பத்தினர் கண் முன் பலியானார். தகவல் அறிந்து மாவட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து சென்று, கடலில் நீண்ட நேரம் தேடி, புகழேந்தியின் சடலத்தை மீட்டனர்.
courtesy;Dinakaran

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval