Tuesday, January 31, 2017

விற்பனையில் அசத்தும் நோக்கியா 6... நிறை குறைகள் என்னென்ன?

நோக்கியா 6ந்திரன் - 2, பாகுபலி - 2...இந்த ரெண்டுல, எதன் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கு எனக் கேட்டால்,  நோக்கியா - 2 மேலதான் என்கிறார்கள் டெக்கீஸ். அப்படி ஒரு ரீ-என்ட்ரி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் நோக்கியா ரசிகர்கள். அவர்களை இந்த முறை ஏமாற்றவில்லை நோக்கியா. பிப்ரவரியில் நடைபெறவிருந்த MWC 2017- ல் மீண்டும் மொபைல் சந்தையில் நுழையும் என எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா அந்த எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி இப்பொழுதே ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது. நோக்கியா தனது, நோக்கியா 6 என்ற ஸ்மார்ட்போனை கடந்த 13- ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்தது.
முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் 5 லட்சத்தை தொட்ட முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, அடுத்த சில நாட்களில் 1 மில்லியனை தாண்டியது.19- ம் தேதி முதல் விற்பனை தொடங்கிய ஒரு நிமிடத்தில், அனைத்து போன்களும் விற்றுத் தீர்ந்தன..ஒரு நிமிடத்தில் 1 லட்சம் போன்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது இந்த போன். 
நோக்கியா 6
இந்த வாரம் பிலிப்பைன்ஸில் விற்பனையைத் தொடங்கிய நோக்கியா விரைவில் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும். நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், நீண்ட காலத்திற்கு பிறகு வெளியாகும் நோக்கியா மொபைல் என இதற்கு பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. இது தவிர வேறு வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன? நோக்கியா 6-ன் நிறை குறைகள் என்ன?
1. 5.5 இன்ஞ்  IPS FHD (1080 x 1920)  டிஸ்ப்ளே.
2. கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு.
3. 64 - பிட் ஸ்நாப்டிராகன் 430 MSM8937 ஆக்டாகோர் பிராஸசர்.
4. 4 ஜி.பி ரேம் மற்றும் 64 ஜி.பி இன்டர்னல் மெமரி.
5. மெமரி கார்டு மூலமாக மெமரியை 128 ஜி.பி வரை அதிகரித்து கொள்ளும் வசதி.
6. 16 மெகா பிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் முன்புற கேமராவைக் கொண்டுள்ளது.
நோக்கியா
7. டூயல் சிம் மற்றும் 4G LTE வசதி இருக்கிறது.
8. ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளம்.
9. 3,000 mAh திறன் கொண்ட பேட்டரி.
10. ஆனால் USB 3.0 TYPE C ,NFC, வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகள் இதில் மிஸ்ஸிங்.
11. நோக்கியாவின் அடையாளமான "இணைந்த கைகளை" சிறிய மாற்றத்தோடு அப்படியே இதிலும் பயன்படுத்துகிறது.
12. பழைய நோக்கியா ரிங்டோன் மாற்றம் இல்லாமல் அப்படியே இருக்கிறது.
நோக்கியா
13. நோக்கியாவின் கட்டுமான தரம் இதிலும் அப்படியே இருக்கிறது. வால்நட்களை நோக்கியா 6 போன் மூலம் உடைத்து சாப்பிடும் வீடியோ இப்பொழுது இணையத்தில் வைரல்.
இதன் இந்திய விலையை இன்னும் நோக்கியா அறிவிக்கவில்லை. ரூ 15000-18000 இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது,
முதல் போன் என்றாலும், ரசிகர்களை ஏமாற்றவில்லை நோக்கியா. தனது மொபைல் சந்தையை மீண்டும் பிடிக்க, முழு உத்வேகத்துடனேயே களம் இறங்கியுள்ளது. அடுத்த மாதம் 26- ம் தேதி பல ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்துகிறது நோக்கியா.. அதில் பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவான ஒரு மொபைலும் அடக்கம். அதிக நிறைகள் இருந்து, சில குறைகள் இருந்தாலும் இப்பொழுது அனைவரும் கூறுவது ஒன்றுதான் "வெல்கம் பேக் நோக்கியா".
courtesy.vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval