சென்னை,மனித சங்கிலி போராட்டம் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்–அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.சமூக ஆர்வலர் செண்பகா என்பவர் வலைத்தளங்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்.இதற்காக இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைத்து தரப்பினரும் நேற்று காலை 8.30 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரைவிளக்கம் அருகே குவிந்தனர். பின்னர் அவர்கள் காலை 9 மணியளவில் மனித சங்கிலியாக அணிவகுத்து நின்றனர்.இந்த மனித சங்கிலி, கலங்கரை விளக்கத்தில் ஆரம்பித்து, உழைப்பாளர் சிலை வரை நீண்டு காணப்பட்டது. இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.நாட்டு மாட்டின் காப்புரிமை போராட்டத்தில் ஈடுபட்ட திருப்போரூரை அடுத்துள்ள ஆலத்தூரை சேர்ந்த இளைஞர் தமிழரசன் கூறியதாவது:–ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதன் மூலம், நம் நாட்டில் உள்ள நாட்டு மாடு இனத்தையே அழித்துவிடலாம் என நினைக்கின்றனர். அதன்பிறகு, நாட்டு மாட்டுக்கும் அமெரிக்காவே காப்புரிமை பெற்றுக் கொள்ளலாம் என நினைக்கிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வரை அமெரிக்காவால் நாட்டு மாட்டுக்கு காப்புரிமை பெற முடியாது.எனவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதிய சட்டம் இயற்றி நெறிமுறைப்படுத்த வேண்டும். விலங்குகள் நல வாரியத்தில் அன்னிய ந £ட்டினரை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் ‘பீட்டா’ அமைப்பை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ஜனாதிபதி, பிரதமர், தமிழக கவர்னர், தமிழக முதல்–அமைச்சர் மற்றும் விலங்குகள் நலவாரியத்துக்கு அனுப்ப உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.காவிரி விவகாரத்தில், கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறிய போது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏன் மீறக்கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.
--தினத்தந்தி
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval