Saturday, January 14, 2017

ரூ.150 கோடி பேரம் பேசினர் சகாயம் அதிர்ச்சி தகவல்

நாமக்கல்:''கிரானைட் குவாரி தொடர்பான விசாரணை நடத்திய போது, எனக்கு, 150 கோடி ரூபாய் தருவதாக பேரம் நடந்தது,'' என, சென்னை அறிவியல் நகர துணை தலைவர் சகாயம் கூறினார்.
நாமக்கல் அடுத்த, லத்துவாடி நம்பிக்கை இல்லத்தில், 'விவசாயிகள் வாழ்வு மேம்பட வழிபாடு' என்ற நிகழ்ச்சி நடந்தது.இதில், சென்னை, அறிவியல் நகர துணை தலைவர் சகாயம் பேசியதாவது: தமிழகத்தில் 
ஏற்பட்டுள்ள வறட்சியால், தஞ்சை, திருவாரூர் போன்ற பகுதிகளில், சாகுபடி செய்த நிலத்தில் காய்ந்த பயிர்களை பார்த்து, விவசாயிகள் படும் துன்பம், துயரத்தைபோல், நானும், 11 வயதில் அனுபவித்துள்ளேன்.

கிரானைட் குவாரி முறைகேடு குறித்து, நான் விசாரணை நடத்திய போது, எனக்கு, 150 கோடி ரூபாய் லஞ்சமாக தருவதாக, மறைமுகமாக சிலர் மூலம் பேரம் பேசினர். ஊழல் தான் தேசத்தின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளது.

இன்னும், 10, 15 ஆண்டுகளில், ஊழல் ஒழிக்கப்படும். அதற்கு எடுத்துக்காட்டு,சென்னையில், விவசாயி கள் பிரச்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, 20 ஆயிரம் இளைஞர்கள் ஒன்று கூடியது.

விவசாயி கள் மரணம், தேசிய அவமானமாக கருதப்படுகிறது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு, நல்ல பொருளாதார நிலையில் 
courtesy;Dinamalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval